கும்பகோணத்தில் திமுக மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளோடு செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
கும்பகோணத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் – தேர்தல் பணிகள் தீவிரப்படுத்த தீர்மானம்.
கும்பகோணம்: ஏப்ரல், 3 -
கும்பகோணம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தோழமைக்கட்சிச் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை காலை அசூர் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் சு.ப. தமிழழகன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. இராமலிங்கம், கும்பகோணம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் உள்ளூர் தி. கணேசன், முன்னாள் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். மேலும், திமுக தலைமை கழக செய்தித் தொடர்பாளர் கோவி. செழியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சாக்கோட்டை க. அன்பழகனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு சிறப்புரைகள் நிகழ்த்தப்பட்டன. கூட்டணிக் கட்சிகளின் ஒருங்கிணைப்பை பலப்படுத்துதல், வாக்காளர் தொடர்பு பணிகளை விரிவுபடுத்துதல் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டணியின் ஒற்றுமையை வலுப்படுத்தி வெற்றியை நோக்கி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.இந்த கூட்டத்தில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட தோழமைக்கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக பங்கேற்றனர்.இக்கூட்டத்தின் மூலம் கும்பகோணம் தொகுதியில் தேர்தல் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிருபர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

