அரூர் ஒன்றிய செயலாளர்களின் கொத்தடிமையான திமுக அறிவாலயம்..! அதிமுக ஆட்சியில் பெண்களை கற்பழித்து, சீரழித்த, சம்பவம் நியாபகம் இருக்கா..? அரூரில் அதிமுகவின் கொத்தடிமைக்கு திமுக சீட்டு கொடுக்குதாமா..? நிசமாவா..?🔴🔴

Mar 18, 2026 - 19:21
 0  9
அரூர் ஒன்றிய செயலாளர்களின் கொத்தடிமையான திமுக அறிவாலயம்..!   அதிமுக ஆட்சியில் பெண்களை கற்பழித்து, சீரழித்த, சம்பவம் நியாபகம் இருக்கா..?  அரூரில் அதிமுகவின் கொத்தடிமைக்கு திமுக சீட்டு கொடுக்குதாமா..? நிசமாவா..?🔴🔴

தருமபுரி மாவட்டம் என்றாலே வன்னியர் கோட்டை என்று பில்டப் கொடுத்து வந்த அன்புமணி ராமதாஸ் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தருமபுரி மண் பலதரப்பட்ட மக்கள் வாழக்கூடிய மண்ணில் ஒரு சமூகம் மட்டுமே தேர்தல் முடிவை சொல்லும் என தலைக்கணத்துடன் ஒரு ஈகோ அரசியலை உருவாக்கிய பாமகவுக்கு கடந்த 2024 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டியது தருமபுரி. பாமகவை தோற்கடித்து பாடம் புகட்டியது தர்மபுரி என்று சொன்னால் மட்டும் மிகை ஆகாது..! 

தமிழ்நாட்டில் மலைவாழ் மக்கள் அதிகம் வாழ கூடிய அரூர் மண்ணில் பெண்களை ரத்தம் சொட்ட சொட்ட கற்பழித்து சீரழித்த ஆட்சி செய்த கட்சி அதிமுக.! பெண்களின் வளர்ச்சி பற்றியும் பாதுகாப்பு பற்றியும் பேசி நாடக அரசியலை நடத்தி வந்த பாமக விற்கு வன்னியர் சமூக பெண்களே ஆப்பு வைத்ததுதான் உண்மை. ஏனென்றால் 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அரூர் வாச்சாத்தி பெண்களுக்கும் மக்களுக்கும் சுதந்திர நீதி கிடைத்தது. 

இந்த சுதந்திர நீதி வெற்றிக்காகத்தான் அரூர் மக்கள் ஒட்டு மொத்தமாக பாமக, அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடித்தது., தற்போது 2026 சட்ட மன்ற தேர்தலை ஓட்டி கூட்டணி கட்சியான விசிக விற்கு சீட்டு ஒதுக்கலாமா இல்லை திமுக விற்கு சீட்டு ஒதுக்கலாமா என்று திமுக தலைமை தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. 

இந்த சூழலில் எவிடென்ஸ் பார்வை கள ஆய்வு செய்ததில் கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக MLA சம்பத்குமார் தனது உறவுகள் மற்றும் சமூகத்தினரின் வாக்குகள் வைத்து வெற்றி பெற்றார்.

இவர் அரூர் மக்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வராததால் அரூர் மக்கள் இடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் வரும் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் திமுக விற்கு வெற்றி வாய்ப்பு சூடுவதாக எவிடென்ஸ் பார்வை கள ஆய்வில் தெரிய வருகிறது.

மேலும் அதிமுக தரப்பில் ஆர் ஆர் முருகனுக்கு சீட்டு ஒதுக்க போவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் எஸ் பட்டி, மத்தியம்பட்டி, மருதுபட்டி, கோட்டப்பட்டி, அழகிரி நகர், பட்டுக்கோணம்பட்டி, மலைவாழ் பகுதி சித்தேரி, வாச்சாத்தி, இதில் உள்ள பட்டியலின மக்களிடையேவும் மற்றும் கொங்கு வேளாளர் சமூக மக்களிடையேவும் நல்ல நட்புறவாகவும் நல்ல பழக்க வழக்கங்கள் உள்ள நபருக்கே சீட்டு ஒதுக்க திமுக முடிவு செய்து வருவதாக கூறப்படுகிறது. 

அப்படியானால் விசிக கட்சியை சார்ந்த சாக்கன்சர்மா விற்கு சீட்டு ஒதுக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தனது சமூகம் மட்டுமல்லாமல் மாற்று சமூகத்திலும் பிரச்சனை எதுவும் இருந்தால் சுமூகமாக முடித்து வைப்பவர் சாக்கன் சர்மா, மேலும் அரூரில் விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை வரவழைத்து மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை கூட்டி அரூர் மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றார் ஆனால் சீட்டு ஒதுக்குவற்கு முன்பு இவர் மீது நில மோசடி குற்றச்சாட்டு கட்டப்பஞ்சாயத்து குற்றச்சாட்டு ஏதேனும் இருக்கிறதா என்று உளவுத்துறை மூலம் தகவல் கேட்டு வருகிறதாம் திமுக தலைமை.. 

திமுக தரப்பில் அரூர் தொகுதியின் அறிவிக்கபடாத வெற்றி வேட்பாளராக பேசபட்டு வரும் தீ கோட்டீஸ்வரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொறுப்ப்பில் இருந்து இளைஞர் பட்டாளத்திடமும் அனைத்து சமூக மக்களிடமும் நல்ல பழக்க வழக்கத்துடன் மிக ஆழமாக இடம் பிடித்துள்ளார் என்று அரூர் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், திமுக நிகழ்ச்சிகளில் பேனர் அடிப்பதும் சுவர் விளம்பரம் செய்வதும் போன்ற பல்வேறு முன்னேற்பாடுகளை எடுத்து நடத்தி திமுக வட்டாரங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருபவர் தீ கோட்டீஸ்வரன் . 

இந்த நிலையில் தீ. கோடீஸ்வரனுக்கு சீட்டு ஒதுக்கலாம் அது சரியாக இருக்கும் என திமுக வட்டாரத்தில் எதிர்பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. மற்றும் அரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பெண்களின் வட்டாரத்தில் பேரும், புகழுமாகவும், செல்வாக்கு நிறைந்த நபராகவும், இருக்கும் கம்பைநல்லலூர் பகுதியை சேர்ந்த மகளிரணி பொறுப்பில் இருக்கும் கவிதா மோகன்தாஸ் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படி இருக்கும் சூழலில் திமுக நிகழ்ச்சிகளில் ஓரம் நின்று வேடிக்கை கூட பார்க்க வராத பொய்யப்பட்டி பகுதியை சேர்ந்த அதிமுக எம் எல் ஏ சம்பத் அவர்களின் கொத்தடிமையான உறவுக்காரர் ஆன சண்முகம் என்பவர் தாயார் எஸ்.சி சமூதாயமாகவும், அவர் தந்தை பி.சி சமூதாயமாகவும் இருந்து கலப்பு திருமணம் செய்து கொண்டதால் சண்முகத்திற்கு இரண்டு சாதி சான்றிதழ் உள்ளதாக கூறப்படுகிறது. தந்தை வழி செல்வாக்கை வைத்து திமுக ஒன்றிய செயலாளர்கள் பணம் வாங்கிக்கொண்டு திமுக தலைமையிடம் சிபாரிசு செய்ததாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஒரு உண்மையான திமுக போராளிக்கு சீட்டு கொடுக்க சிபாரிசு செய்ய துணிவில்லாத அரூர் திமுக ஒன்றிய செயலாளர்கள் பணத்திற்காக மறைமுகமாக அதிமுகவை மீண்டும் வெற்றி பெற செய்யவேண்டும் என்று திட்டமிட்டுள்ளது மிக மோசமான அரசியல் என்று கூறுகின்றனர் அரூர் திமுக நிர்வாகிகள், 

மேலும் அரூர் திமுக ஒன்றிய செயலாளர்களின் கொத்தடிமையாக திமுக அறிவாலயம் உள்ளதா..? என சமூக ஆர்வலர்கள் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai