200 ஏக்கரில் மாநாட்டு அரங்கம் - இந்தியாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் திருச்சி மாநாடு..! திரளாக வாருங்கள் தளபதியாரின் இதயங்களே..! அழைப்பு விடுத்தார் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன்..!
200 ஏக்கரில் மாநாட்டு அரங்கம் - இந்தியாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் திருச்சி மாநாடு..!
திரளாக வாருங்கள் தளபதியாரின் இதயங்களே..! அழைப்பு விடுத்தார் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன்..!
திமுக சார்பில் இன்று திருச்சியில் நடக்கும் கழக நிர்வாகிகள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் நடைபெற இருக்கிறது.
இந்த மாநாடு திமுக சார்பில், சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் மாநில தேர்தல் அரசியல் மாநாடு நாளை மாலை நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.இதற்காக சிறுகனூரில் 500 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு,
அங்கு 200 ஏக்கரில் மாநாட்டு அரங்கம் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 240 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. 300 ஏக்கரில் 15 இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 240 அடி நீளத்தில் மேடை... இதுகுறித்து திமுக ஐடி பிரிவு நிர்வாகிகள் கூறுகையில், ‘அரசியல் கட்சி மாநாட்டில் இதுவரை 240 அடி நீளத்தில் இவ்வளவு பெரிய மேடை அமைத்ததில்லை. இதுவே முதல் முறை. ஏற்கனனே திமுகவை தொடர்ந்து, தவெக 200 அடி நீள மேடை அமைந்திருந்தது. அதுவே பெரிய மேடையாக இருந்தது. தற்போது இது தான் மிகப்பெரிய மேடை’
மேடையின் பின்னணியில் மாநாட்டு நிகழ்வுகளை காணும் வகையில் 100 அடி நீளம், 40 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது.
தவிர மாநாட்டு அரங்கு முழுவதும் 168 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த திரைகளில் மாநாடு நிகழ்வுகள், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் பேசும் காட்சிகள் ஒளிபரப்பாகும்.
கோட்டை வடிவிலான 1,000 அடி நீள பிரம்மாண்ட முகப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மாநாடு அரங்கு முழுவதும் 66 பாக்ஸ்களாக பிரிக்கப்பட்டு, ஒரு பாக்ஸில் 5,000 பேர் அமரும் வகையில் 3.60 லட்சம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.
மாநாடு அரங்குக்குள் நுழைய 48 இடங்களில் நுழைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்சியினர் அரங்குக்குள் நுழையும்போதே அனுமதி அட்டை, உணவு, 500 மி.லி., குடிநீர் பாட்டில் அடங்கிய பையும் உடனே வழங்கப்படும். இருக்கைகளில் தனியாக 500 மி.லி., குடிநீர் பாட்டில் வைக்கப்பட்டிருக்கும்.மாநாட்டில் பங்கேற்கபதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து தனி விமானத்தில் நாளை திருச்சி வருகிறார். கோர்ட் யார்டு ஓட்டலில் ஓய்வெடுக்கும் அவர் மாலை 5 மணியளவில் சிறுகனூரில் மாநாடு நடைபெறும் இடத்துக்கு வந்து முகப்பு அருகே நிறுவப்பட்டுள்ள 100 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றிவிட்டு மாநாட்டு அரங்குக்குள் காரில் நின்றபடி கட்சி நிர்வாகிகளை பார்த்து கையசைத்தபடி செல்கிறார்.பின்னர் மாநாடு மேடை வரை அமைக்கப்பட்டுள்ள 600 அடி நீள ரேம்பில் நடந்து மேடைக்கு செல்கிறார். அமைச்சர்கள், துணை முதல்வர் உதயநிதி, கட்சி நிர்வாகிகள் பேசிய பிறகு முதல்வர் பேசுகிறார். வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் திராவிட மாடல் அரசு இரண்டாவது முறையாக ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் நல்லாட்சி அமைய முன்னேற்பாடாக விளங்கும் இந்த மாநாட்டில் தருமபுரி மேற்கு மாவட்டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும் குறிப்பாக மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமை உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக செயலாளக்ர்கள், வார்டு கிளை செயலாளர்கள், தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள், இயக்கத்தின் சார்பு அணியினர், என கழகத்தில் உள்ள அனைத்து பொறுப்பர்களும் கலந்து கொண்டு வெற்றி கரமாகவும் பாதுகாப்பாவும் வீடு திரும்ப வேண்டும், ஏனெனில் நீங்கள் தொண்டர்கள் அல்ல திராவிட தளபதியாரின் இதயங்கள் என்றார். மேலும் இந்த மாநாடு இந்திய அளவில் சாதனையை படைக்கும் அளவிற்கும் நாம் அனைவரும் திரளாக திரண்டு பங்கேற்போம் வாருங்கள் என தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

