கும்பகோணம்: அரசியல் களம் சூடேற்றம்: கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் தவெக வேட்பாளர் தேர்வில் யார்?
கும்பகோணம் தொகுதியில் தவெக கட்சியின் வேட்பாளர் தேர்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது. தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், கட்சியின் உள்ளே செயல்பாடுகள் மற்றும் நிர்வாகிகளின் சமூகப் பணிகள் மக்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
தஞ்சை கிழக்கு மாவட்டம் பகுதியில் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் வினோத் ரவி, தமிழக வெற்றி கழகம் தொடங்கியது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்வுகள் மூலம் தொகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அவரது செயற்பாடுகள், அடித்தளத் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையில், இணைச் செயலாளர் எஸ். பிரபாகரன் அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களை மார்ச் 3ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அழைத்து வந்து பிரம்மாண்ட கொடி கம்பத்தை திறந்து வைத்த நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் பெற்றதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து, தொகுதியில் கட்சியின் தாக்கத்தை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும், மார்ச் 4ஆம் தேதி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தஞ்சை கிழக்கு மாவட்டம் சார்பில் கழக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து, வெள்ளியில் செய்யப்பட்ட பிரம்மாண்ட செங்கோலை வழங்கிய சம்பவம் கட்சித் தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு, கட்சியின் உள்ளே அரசியல் சமநிலையை பிரதிபலிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கும்பகோணம் தொகுதியில் தவெக வேட்பாளராக யார்? அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் நலப்பணிகளில் சிறந்து விளங்குபவருக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
தஞ்சை மாவட்ட
நிருபர் அ மகேஷ்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

