கும்பகோணத்தில் தெருமுனைப் பிரச்சாரத்தில் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நாம் தமிழர் கட்சி
கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி தெருமுனை பிரச்சார பரப்புரைக் கூட்டம் – திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த நிர்வாகிகள்
கும்பகோணம்: மார்ச், 7 -
கும்பகோணம் மாநகராட்சி மேலக்காவேரி கடைத்தெரு பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் தெருமுனை பிரச்சார பரப்புரைக்கூட்டம் சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ. ஆனந்த் அவர்களை முன்னிறுத்தி வெற்றி பெறச் செய்யும் நோக்கில் “மாற்றத்தை விரும்பும் கும்பகோணம் தொகுதி” என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு வடமேற்கு மாவட்ட செயலாளர் உ. தாரிக்ஜான் தலைமை தாங்கினார். தொகுதித் தலைவர் கோ. மணிகண்டன் மற்றும் தொகுதி துணை செயலாளர் முகமது ரிபாவுதீன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சா. சுரேஷ் தொடக்க உரையாற்றினார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி செந்தில் எழுச்சி உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், கும்பகோணம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் 2021 முதல் 2026 வரை என்ன செய்தார் எனவும் சொந்தமாக சாக்கோட்டையில் அன்பு திருமணமண்டபம் கட்டினார். வருடா வருடம் பிறந்த நாள் கொண்டாடுகிறார் பிரியாணி போடுகிறார் என்பதை தவிர அவர் என்ன செய்தார் என கேள்வி எழுப்பினர். தேர்தல் நேரத்தில் தொகுதிக்கு செய்த பணிகளை விளக்கும் வகையில் 130 பக்கம் கொண்ட புத்தகம் வெளியிட்டு வீடு தோறும் வழங்கியுள்ளதாக கூறினார். ஆனால் அந்த புத்தகத்தில் செலவிட்ட தொகை மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மாநில அரசிடம் இருந்து இதுவரை தொகுதிக்கு பெற்ற நிதி விவரங்கள் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் அன்பழகனை விமர்சித்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ. ஆனந்த் பேசுகையில், கும்பகோணத்தில் தரமற்ற தார் சாலைகள் சுகாதாரமற்ற மருத்துவமனைகள் பாதாள சாக்கடைகள் சரியான முறையில் தூர்வாரப்படவில்லை மழை நீர் வடிகால் பராமரிப்பு இல்லை, மேலக்காவேரி பகுதியில் மயான வசதி சரியில்லை, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது போன்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் கும்பகோணம் தொகுதி எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை எனவும் சாடினார். மேலும் இந்த கூட்டத்தில் தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ரா. அசோக், மாநில இளைஞர் பாசறை செயலாளர் முகமது யூசுப், மாநில மகளிர் பாசறை செயலாளர் பாபநாசம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் செ. அனீஸ் பாத்திமா ஆகியோர் ஆளும் திமுக அரசையும், தமிழக வெற்றிக் கழகத்தையும் கண்டித்து உரையாற்றினர். கும்பகோணம் தொகுதியில் திமுக ஆட்சியின் அவல நிலைகளை எடுத்துரைத்து மாற்றம் தேவை என வலியுறுத்தினர்.
தஞ்சை மாவட்ட நிருபர்
அ, மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

