EMI செலுத்தியும் அபராதம்…விதித்த வங்கி..மோசடியா..? கும்பகோணத்தில் HDB வாடிக்கையாளர் அதிர்ச்சி! -

Mar 13, 2026 - 13:02
Mar 13, 2026 - 13:07
 0  85
EMI செலுத்தியும் அபராதம்…விதித்த வங்கி..மோசடியா..? கும்பகோணத்தில் HDB வாடிக்கையாளர் அதிர்ச்சி! -

EMI செலுத்தியும் அபராதம்… கும்பகோணத்தில் HDB வாடிக்கையாளர் அதிர்ச்சி!

HDB பைனான்ஸ் சர்விஸ் தொடர்பான EMI வசூலில் ஏற்பட்ட பிரச்சினையால் கும்பகோணத்தைச் சேர்ந்த பெண் வாடிக்கையாளர் ஒருவர் மன உளைச்சலுக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த மணிமேகலை (46) கடந்த 28.12.2025 அன்று செல்வம் தியேட்டர் அருகில் உள்ள மாஸ் மொபைல் என்ற கடையில் ரூ.16,499 மதிப்பில் மொபைல் போன் வாங்கியுள்ளார். அப்போது அவரிடம் முழு தொகை இல்லாததால் கடை நிர்வாகிகள் EMI முறையில் வாங்குமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதன்படி, எச்.டி.பி பைனான்ஸ் சர்விஸ் மூலம் (இ எம் ஐ) வசதி ஏற்பாடு செய்யப்பட்டு, மணிமேகலை ரூ.2000 முன்தொகை செலுத்தி மொபைல் வாங்கிச் சென்றுள்ளார். முதல் மாத தவணை தொகையை 09.02.2026 அன்று பணம் மணிமேகலை வங்கியில் செலுத்தாமல் நேரில் சென்று செலுத்தி ரசீது பெற்றுள்ளார். ஆனால் தவணை கட்ட வேண்டிய நாள் 4ம் தேதி என்பதால், ஐந்து நாட்கள் தாமதமாக கட்டியதாக கூறி ரூ.522 அபராதம் கூடுதலாக முதல் மாதத்தில் வசூலிக்கப்பட்டதாக தெரியவருகிறது.

அதன்பின்னர், இரண்டாவது தவணையை மார்ச் 4ம் தேதி அன்று குறித்த தேதியில் வங்கி கணக்கில் செலுத்தாமல் நேரில் சென்று ரூ.2886 தொகையை வழங்கியுள்ளார். அப்போது penal interest ரூ.14 கூடுதல் அபராதம் சேர்த்து மொத்தம் ரூ.2900 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்குப் பிறகு, எச் டி பி பைனான்ஸ் சர்விஸ் நிறுவனத்திலிருந்து மார்ச் 11ஆம் தேதி மணிமேகலை செல்போனுக்கு வந்த செய்தியில், மேலும் ரூ.469 அபராதம் செலுத்த வேண்டும் என ஒரு மெசேஜ் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணிமேகலை மீண்டும் வங்கி அலுவலகத்துக்குச் சென்று விளக்கம் கேட்டபோது, “வங்கி கணக்கில் செலுத்தாமல் நேரில் பணம் செலுத்தியதால் செக் பவுன்ஸ் காரணமாக கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டது” என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் மக்கள் இடையே பேசும் பொருளாக மாறி உள்ளதால் (HDB) வாடிக்கையாளர்கள் இனி அந்த வங்கியில் வரவு செலவு வைத்துக் கொள்ளக் கூடாது என மனதில் முணுமுணுத்தவாறு உஷாராகி வருகின்றனர் என நமது உளவு புறா தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சை மாவட்ட நிருபர் 

அ. மகேஷ்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai