பயணிகளை அச்சுறுத்திய அதிவேகம் – திருவலஞ்சுழி அருகே செந்தில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து..!

Mar 11, 2026 - 12:52
 0  139
பயணிகளை அச்சுறுத்திய அதிவேகம் – திருவலஞ்சுழி அருகே செந்தில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து..!
பயணிகளை அச்சுறுத்திய அதிவேகம் – திருவலஞ்சுழி அருகே செந்தில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து..!

பயணிகளை அச்சுறுத்திய அதிவேகம் – திருவலஞ்சுழி அருகே செந்தில் தனியார் பேருந்து மரத்தில் மோதி விபத்து..!

கும்பகோணம்:மார்ச், 11 -

கும்பகோணம் டு தஞ்சாவூர் மெயின் சாலையில் திருவலஞ்சுழி அருகே அதிவேகமாக சென்றதாக கூறப்படும் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக பெரும் உயிர்சேதமின்றி தப்பினர்.

நேற்று காலை புதுச்சேரி இருந்து புறப்பட்டு சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் நோக்கி சென்ற “செந்தில்” என்ற

 (TN 68 - AP 5619) தனியார் பேருந்து 10 ஆம் தேதி பிற்பகல் சுமார் 12.20 மணியளவில் திருவலஞ்சுழி எல்லைப் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் தாழ்வான பள்ளத்தாக்கில் இருந்த மரத்தில் மோதியதாக கூறப்படுகிறது. விபத்து நேரத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் பலர் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் லேசான காயங்களுடன் தப்பினர். தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணிகளில் உதவினர்.இதற்கிடையில், விபத்து நடந்தபோது அங்கு இருந்தவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க முயன்றபோது அங்கு வந்த பேருந்து உரிமையாளர், தன்னுடைய டிரைவர் மற்றும் நடத்துனரை வைத்து தடுக்க முயன்றதாகவும், இதனால் அங்கு சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மெத்தன போக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநரின் அதிவேகம், கவனக்குறைவு அல்லது வாகன கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து தொடர்ந்து ஆமை வேகத்தில் ஆய்வு நடைபெற்று வருவதாக நமது உளவு புறா தெரிவித்துள்ளது. திருவலஞ்சுழி அருகே நிகழ்ந்த இந்த விபத்து பெரிய உயிரிழப்புகளாக மாறாமல் முடிந்தது அதிர்ஷ்டமானதாக இருந்தாலும், தனியார் பேருந்துகளின் வேக கட்டுப்பாடு மற்றும் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு இதுபோன்ற சம்பவங்களுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளுமா? அல்லது தேர்தலுக்கு குறிப்பிட்ட நாட்களே உள்ள நிலையில் மௌனம் சாதிக்குமா? என பொறுத்திருந்து பார்ப்போம்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai