அரூர் அருகே தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பொது மக்களுடன் சேர்ந்து தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் மாசிமக திருதேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து சென்றனர்

Mar 8, 2026 - 21:28
 0  14
அரூர் அருகே தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி மற்றும் அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் பொது மக்களுடன் சேர்ந்து தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் மாசிமக திருதேரோட்டத்தை வடம் பிடித்து இழுத்து சென்றனர்

அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் மாசிமக திருதேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது- பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் மாசிமக தேர்திருவிழா கடந்த 02.03.2026 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 5-ம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்த நிலையில் 7-வது நாளான இன்று மாசிமக திருதேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி, கோட்டாட்சியர் செம்மலை, சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், உள்ளிட்டோர் பொதுமக்களுடன் சேர்ந்து வடம் பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர்தேர் வீதிஉலா சென்றதை தொடர்ந்து இரண்டாவதாக அம்மன் தேர், மூன்றாவதாக ஈஸ்வரன் வடிவாம்பிகை தேர் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த தேர்த்திருவிழாவில், பல்லியிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். 

மேலும், தேரின் மீது உப்பு, மிளகு, பொரி உள்ளிட்டவைகளை வீசி, தங்களது நேர்த்திக் கடன் செலுத்தினர். அதேப்போல் தேர் வீதிஉலாவின் போது ஆடுகளை, தேரின் சக்கரத்தில் வைத்து நேர்த்தி கடன்களை செலுத்தினர்‌. இந்த திருவிழாவிற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது‌. குற்றச்செயல்களை தடுக்க 52 கண்காணிப்பு கேமராக்கள் வைத்து 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai