விற்பனைக்கு - தருமபுரி திமுக - வாங்குபவர்கள் அதிமுக, பாமக, விற்பவர் ஆ மணி, MLA வா ஜெயிச்சிட்டா என்ன எப்படி மதிப்பாங்க இதுதான் பிளானமே தளபதி..! TVK தளபதி இல்லப்பா,, திமுக தளபதி,!!
தமிழக அரசியல் வரலாற்றை புரட்டி போடும் மண்ணாக இருக்கும் மாவட்டம் தருமபுரி. இந்த மண்ணில் சாதியாகவும் கொள்கையாகவும் பிரிந்து கிடக்கும் மக்களை ஒன்று சேர வைக்க சமூகநீதி கட்சிகள் போராடினாலும் உள்ளூர் அரசியல் யோக்கியர்கள் சாதி சாக்கடையில் இன்னும் உருண்டு பிரண்டுகொண்டிருக்கின்றனர்.
அப்படி உருண்டு பிரண்டுதான் சில கட்சிக்குள்ளேயே சாதி அரசியல் ஊடுருவி நிற்கிறது. குறிப்பாக தருமபுரி மண்ணில் அடையாளமே தெரியாத ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நிறுத்தி உறுப்பினர் பதவியை இழக்க போவதாக அன்புமணி கூறியதாக சொல்லி அன்புமணியை விமர்சனம் செய்தார் தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி ஆ மணி.
அன்புமணி சொன்னதில் என்ன தவறு இருக்கிறது 2014 இல் அடிலம் திமுக நிர்வாகி ஒருவரால் தடங்கம் சுப்பிரமணியிடம் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் அமைச்சர் எ வ வேலு அவர்களின் சிபாரிசால் எம் பி சீட்டை பெற்று மக்களை அழைத்தால் ஓடோடி வந்து நல்லது செய்வேன் என்று கூறி இதுவரையில் எந்த ஒரு பகுதியிலும் அவர் ஓடி போய் மக்கள் சேவையை செய்ததில்லை என்பதுதான் உண்மை என்கின்றனர் தருமபுரி திமுக வட்டாரங்கள். மேலும் தற்போது இவரே டெண்டர் பணிகளை செய்து வருவதால் திமுகவில் உள்ள வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் செத்த கருவாடாய் உள்ளனர்,
இதுமட்டுமா முன்னாள் அதிமுக அமைச்சர் கே பி அன்பழகனும் திமுக எம் பி ஆ மணி நல்ல நெருக்கமாய் அன்பை பரிமாறிக்கொள்கிறார்களாம் அதுமட்டுமில்லை 9 கோடிக்கு சாலை பணிக்கான பணியை திமுக அமைச்சரின் உதவியாளர் மூலம் சிபாரிசு செய்து கே பி அன்பழகனுக்கு வாங்கி கொடுத்துள்ளாராம் எம் பி மணி என்றாகின்றனர் பாலக்கோடு திமுக நிர்வாகிகள்.
கடந்த மாதத்திற்கு முன்பு நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி நல்லமுத்து ஆறுமுகத்தை சாதி ரீதியாக பேசியது குறித்து இதுவரை ஆறுமுகத்தை நேரில் சந்தித்து இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என ஆறுதல் கூட கூறவில்லையாம் எம் பி . ஆனால் மல்லமுத்துவை மட்டும் அழைத்து நான் இருக்கும் வரை உனக்கு எந்த பிரச்சனை இல்லை என்று ஆதரவாக பேசியது தருமபுரி பகுதியில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதனால் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் ஆதரவாளர்கள் அப்பகுதியில் உள்ள தீப்பாஞ்சி அம்மன் கோவில் அருகே 5 ஊர் பகுதியை சேர்ந்த 250 மேற்பட்ட பங்காளிகள், மாமன் மச்சான்கள் ஒன்று சேர்ந்து திராவிடத்தில் இருந்துகொண்டு சாதிய வன்முறைக்கு ஆதரவாக எம் பி செயல்படுகிறார் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆதரவில் யார் பாமகவில் நின்றாலும் அவர்களுக்கு வாக்களிப்போம் இந்த முறை திமுகவிற்கு நாம் வாக்களிக்க கூடாது என்று கூட்டம் நாடத்தியுள்ளனர்.
தருமபுரி பென்னாகரம் அரூர் போன்ற தொகுதிகளில் எம் பி ஆ மணியின் அரசியல் பணி மோசமாக உள்ளதால் வரும் சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் திமுக என்கின்றனர் திமுக பொறுப்பாளர்கள். காரணம் தன்னுடைய மூன்று தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்கள் அமைச்சராவார்கள் பின்னர் தன்னை யாரும் மதிக்க மாட்டார்கள் எம் பி யை விட அமைச்சருக்குத்தான் கெத்து என நினைத்து திமுக கழகத்திற்கு உண்மையான பணிகளை செய்யாமல் கே பி அன்பழகனுக்கும் பாமக வின் அன்புமணி ஆதரவாளர்களுக்கு உயிராகவும், அன்பாகவும் இருக்கிறாராம் இந்த ஆ மணி.,
இப்போ புரியுதுங்களா...நீங்களே சொல்லுங்க சாதி பாசமா சமூக நீதி பாசாமான்னு..!
பாலக்கோடு வெற்றி அடைந்தால் கே பி அன்பழகனுக்கு பெரிய வருத்தமாக இருக்கும் எனவும் தனது டெண்டர் பணிகள் பெரிய அளவில் பாடதிக்கும் எனவும் தனது சொந்த ஊரான காரிமங்கலம் பகுதி மற்றும் கூடைக்காரன் கொட்டாய் உறவுகளிடம் சய்லண்டாக அன்பழகனுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும் என்று ஸ்டைலில் உள்ளதாம் தருமபுரியின் புதிய மாவட்ட செயலாளரின் பணிகள். இன்னும் என்னத்த சொல்ல தனக்கொரு கூட்டம் இருக்கற மாதிரி செய்தியாளர்களையும் பிரித்து தனக்கு ஓர் செய்தியாளர் கூட்ட்டத்தை உருவாக்கி அவர்களுக்கு செம்ம சப்போட்டா இருக்காரு..!
இப்போ இது போக இவரின் பணிகள் சரியாக இல்லாததால் மறைமுகமாக அதிமுக, பாமக, திருமபுரி திமுக வை 5 வருடத்திற்கு வாடகை விட்டுள்ளார் போல இல்ல இல்ல வித்துட்டுதா தான் கணக்கு என்கின்றனர் திமுக கழக தொண்டர்கள்....! யாரை நம்பி நான் பொறந்தேன் போங்கடா போங்க எனக்கு டெண்டர் கமிஷன் மட்டும் போதுமடா போங்கடா போங்க என்ற வரிகள் நியாபகம் வருது...!
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
2
Wow
0

