கும்பகோணத்தில் திமுக அமோக வெற்றி பெறும் கும்பகோணத்தின் செல்லப்பிள்ளை சாக்கோட்டை க.அன்பழகன் பிரச்சாரம்

Apr 3, 2026 - 17:22
Apr 4, 2026 - 00:58
 0  28
கும்பகோணத்தில் திமுக அமோக வெற்றி பெறும் கும்பகோணத்தின் செல்லப்பிள்ளை சாக்கோட்டை க.அன்பழகன் பிரச்சாரம்

கும்பகோணத்தில் திமுக கூட்டணி வேட்பாளருக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

கும்பகோணம்: ஏப்ரல், 3 –

கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இத்தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளரும், திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான சாக்கோட்டை க. அன்பழகனை ஆதரித்து பரவலான வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 48வது வார்டு குட்ஷெட் ரோடு இளங்கா நகர் முதல் 44வது வார்டு எல்.பி.எஸ் சாலை சுஜாதா நகர் வடக்கு தெரு வரை நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில், வேட்பாளர் சாக்கோட்டை க. அன்பழகன் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தார் அப்பகுதி மக்கள் மத்தியில் உற்சாகமான வரவேற்பு காணப்பட்டது. இந்த வாக்கு சேகரிப்பை மாநிலங்களவை உறுப்பினர்கள் சு. கல்யாணசுந்தரம் மற்றும் செ. இராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கலந்து கொண்டு கூட்டணிக்கான ஆதரவை வலியுறுத்தினார்.நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் மாநகராட்சி துணை மேயர் சு.ப. தமிழழகன், காங்கிரஸ் கமிட்டி தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் டி. குமரன், சி.பி.ஐ பாரதி, உட்பட கூட்டணியில் இடம்பெற்றுள்ள தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள், திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் செயல்படும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தேர்தல் பணிகளை உற்சாகமாக முன்னெடுத்தனர்.

நிருபர் அ. மகேஷ்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai