"பரிதாப நிலையில் அதிமுகவின் டோக்கன் திட்டம்" சாபம் விட்டு சென்ற பெண்கள் கும்பகோணத்தில் பரபரப்பு..!

Mar 16, 2026 - 11:23
Mar 16, 2026 - 11:40
 0  38
"பரிதாப நிலையில் அதிமுகவின் டோக்கன் திட்டம்"   சாபம் விட்டு சென்ற பெண்கள் கும்பகோணத்தில் பரபரப்பு..!

கும்பகோணம்: மார்ச் 14 –

 மாநகராட்சி ஏ.ஆர்.ஆர். சாலையில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் நடத்திய தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டத்தில் சனிக்கிழமை இரவு பெண்களுக்கு இலவச புடவை வழங்கியதில் எழுந்த சர்ச்சை

தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார பரப்புரை கூட்டத்தில், கும்பகோணம் மாநகர செயலாளர் ராம. ராமநாதன் முன்னிலை வகித்தார். கும்பகோணம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சோழபுரம் க. அறிவழகன். பரப்புரை நிகழ்த்தினார்.கூட்டத்தில் பாஜக, அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மேடையில் ஆளும் திமுக அரசையும், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகனை கடுமையாக விமர்சித்து பேசினர். மேலும் அதிமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினர். அதனைத் தொடர்ந்து வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்தால் மக்களுக்காக செயல்படுத்தப்படவுள்ள நலத்திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் விளக்கமாக பேசினார்.இந்த நிகழ்ச்சியை பொற்றாமரை பகுதி கழகச் செயலாளர் மற்றும் அதிமுக மாமன்ற உறுப்பினர் பத்ம குமரேசன் ஏற்பாடு செய்திருந்தார். மண்டல செயலாளர் அ. அறிவொளி நிறைவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களுக்கு முன்னதாக டோக்கன் கொடுத்து கூட்டத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரவு 9.40 மணி அளவில் தேர்தல் பிரச்சார பரப்புரை கூட்டம் முடிவடைந்த நிலையில் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு தாமதமாக தலா ரூ.120 மதிப்புள்ள புடவைகள் இலவசமாக வழங்கப்பட்டன. டோக்கன் வாங்காத பெண்கள் புடவைக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிமுக மீது பல சாபங்களையும், கேள்விகளையும், பேசிச்சென்ற நிகழ்வு அங்கு கூடியிருந்த மக்களிடையே பல்வேறு கருத்துகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai