தருமபுரி லக்கியம்பட்டி பள்ளி மாணவர்கள் மீது பதிந்த எஃப் ஐ ஆர்...! தமிழக கல்வித்துறை படைத்த சாதனை பாலியல் குற்றச்சாட்டு ஆசிரியர்களுக்கு பஞ்சாயத்து பேசும் சி இ ஓ ஜோதி சந்திரா மாணவர்களின் வாழ்க்கைக்காக பஞ்சாயத்து பேசலையே..!!!

Feb 11, 2026 - 11:00
Feb 11, 2026 - 12:13
 0  224
தருமபுரி லக்கியம்பட்டி பள்ளி மாணவர்கள் மீது பதிந்த எஃப் ஐ ஆர்...! தமிழக கல்வித்துறை படைத்த சாதனை   பாலியல் குற்றச்சாட்டு ஆசிரியர்களுக்கு பஞ்சாயத்து பேசும் சி இ ஓ ஜோதி சந்திரா மாணவர்களின் வாழ்க்கைக்காக பஞ்சாயத்து பேசலையே..!!!

தருமபுரி லக்கியம்பட்டி பள்ளி மாணவர்கள் மீது பதிந்த எஃப் ஐ ஆர்...! தமிழக கல்வித்துறை படைத்த சாதனை 

பாலியல் குற்றச்சாட்டு ஆசிரியர்களுக்கு பஞ்சாயத்து பேசும் சி இ ஓ ஜோதி சந்திரா மாணவர்களின் வாழ்க்கைக்காக பஞ்சாயத்து பேசலையே..!!

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 31: 01: 2026 அன்று திறனறிவு தேர்வு எழுதுவதற்காக மிட்டாநூலஅள்ளி பள்ளியை சேர்ந்த மாணவர் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதற்கட்ட தேர்வு எழுதி ஒன்று பத்து மணியளவில் சாப்பிட அமர்ந்திருந்த போது இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பார்த்து மிட்டாநூல அள்ளி பள்ளி மாணவர் எதிரில் வந்த இலக்கியம்பட்டி பள்ளி மாணவர்களை ஆபாசமாக கிண்டல் செய்ததாகவும் மறுபுறம் இலக்கியம்பட்டி பள்ளி மாணவர்கள் இவரை பார்த்து கிண்டல் செய்ததாகவும் அதில் ஏற்பட்ட வாய் தகராறில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது மிட்டா நூலஅள்ளி பள்ளி மாணவனுக்கு கைகளில் பலத்த காயம் ஏற்பட்ட கூறப்பட்டநிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

 பள்ளியில் நடக்கும் பல்வேறு சம்பவங்களை பற்றியும் டுபாக்கூர் கதைகளுக்கெல்லாமும் தீவிரமாக விசாரணை செய்யும் சிஇஓ மேலும் பள்ளி மாணவிகளிடையே பாலில் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் பஞ்சாயத்து பேசி குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பஞ்சாயத்து பேசிவிட்டு அவர்களை பணியில் அமர்த்தி அழகு பார்த்து வரும் சி இ ஓ ஜோதி சந்திரா தனது மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டரில் அருகில் உள்ள பள்ளியில் நடக்கும் சம்பவம் குறித்து எதையும் கேட்டு அறியாமல் அடிபட்ட மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களின் வாழ்க்கையை காப்பாற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்து பள்ளி மாணவர்களை பழிவாங்கும் சூழலில் செயல்பட்டதால் இன்று சுமார் 4 பள்ளி மாணவர்கள் மீது பெற்றோர்களுக்கு தெரியாமலேயே எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. சிஇஓ ஜோதி சந்திரா தர்மபுரி நகர பகுதியில் உள்ள பாஜகவின் முக்கிய நபர்களின் பேச்சுகளையும் பாமகவின் கருத்துகளையும் கேட்டு தான் செயல்படுகிறார் என அலுவலகத்தில் உள்ள ஒரு சில அதிகாரிகள் கூறுகின்றனர் இது குறித்து இங்கே இருக்கும் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் திமுக அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது சி இ ஒ விற்கு பெரும் சிற்ப சொப்பனமாக ஆதரவு நீடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

அந்த மாணவர்களை A1- ஒருவர் கைது மற்றொருவர் A2- நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் A- 3 தலைமறைவு என எஃப் ஐ ஆர் நகலில் பதியப்பட்டுள்ளது மேலும் வழக்கு பதிவு போட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு சம்பவம் குறித்து இதுவரையில் வெளிப்படையாக விசாரணை கூட செய்ய முடியாமல் மௌனம் காத்து வருவது மாணவர்களின் பெற்றோர் தரப்பில் பெரும் சந்தேகத்தை எழுப்பி வருகிறது

மேலும் இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

தலைமையாசிரியர் இது குறித்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடத்தில் தகவல் தெரிவிக்காமல் இருந்ததால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் லக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் செயல்பாட்டாலும் மாணவர்களின் வாழ்க்கையை சிந்தித்து பார்க்காமல் சுமுகமான பேச்சு வார்த்தைக்கு முயற்சிகள் செய்யாமல் இருந்ததால் இன்று வழக்கப்பதியப்பட்டு மாணவர்களின் எதிர்காலத்தையே அழித்துவிட்டது.

ஆசிரியர் மாணவர்களின் வாழ்க்கை நல்ல வளர்ச்சி அடையும் என்று நினைப்போம் ஆனால் அடிக்கடி இந்த லக்கியம்பட்டி பள்ளியில் ஆசிரியர்களின் ஈகோ, மற்றும் கால் புரடசி காரண பிரச்சனையால் மாணவர்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது எனவே இங்கே பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்தும் தருமபுரி சி இ ஓ ஜோதி சந்திரா மீது சாதி அக்கறை காட்டாமல் விசாரணை வைக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai