நாகரிகம் மறந்த திமுக..! மேற்கு வட்டதை அழைத்து அசிங்க படுத்திய கிழக்கு மாவட்ட அமைச்சர் நிகழ்சி..! கொதிப்பில் திமுக பழனியப்பனின் ஆதரவாளர்கள்..!

Feb 22, 2026 - 10:04
 0  130
நாகரிகம் மறந்த திமுக..! மேற்கு வட்டதை அழைத்து அசிங்க படுத்திய கிழக்கு மாவட்ட அமைச்சர் நிகழ்சி..! கொதிப்பில் திமுக பழனியப்பனின் ஆதரவாளர்கள்..!

தருமபுரி மாவட்டத்தில் திமுக அரசியல் ஒரு வினோதமான மாயவலையில் சிக்கி கொண்டு தவித்து வருகிறது. இதனால் தருமபுரியில் 3 இடங்களில் திமுக தோற்பதற்கு தர்மபுரியில் உள்ள திமுக, மற்றும், விசிக, கூட்டணி நிர்வாகிகளே பெரும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி ஆ மணி யின் கையில் எப்போது மாவட்ட செயலாளர் பதவிகளை திமுக கொடுக்க ஆரம்பித்ததோ அப்போதிருந்து தருமபுரியில் திமுக பெரும் தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக இதில் பென்னாகரம், அரூர், தருமபுரி, போன்ற தொகுதிகளில் சிறப்பாக பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எந்த ஒரு மரியாதையும் கொடுப்பதில்லையாம் எம் பி..?

மேலும் கட்சிக்குள் ஏதாவது பிரச்சனை நடப்பதை பற்றி விமர்சனம் செய்தால் யார் விமர்சனம் செய்கிறாரோ அந்த நபரின் சாதியைசார்ந்த நபரிடம் கூறி மிரட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறார் எம் பி என திமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

திமுக அடிமட்ட தொண்டர்களுக்கு எந்த மரியாதையும் தரவில்லை சரி சக மாவட்ட செயலாளர் பொறுப்புக்காவது மரியாதை கொடுப்பார்கள் என்று பார்த்தால் அது படும் கேவலமான மரியாதையாக இருக்கிறது என்கின்றனர்.

நேற்று நடந்த சம்பவத்தை அரூர் திமுக தொண்டர்கள் கூறுகையில்

நேற்று 22; 02; 2026 அன்று சனிக்கிழமை தருமபுரி திமுக கிழக்கு மாவட்டமான அரூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் பங்கேற்றார். அப்போது முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் அவர்களை மேடையில் அமரவைக்காமல் மேடைக்கு கீழே அமரவைத்து வேண்டுமென்றே அவமானப்படுத்தியுள்ளனர். 

அவர் மேடையின் கீழே அமர்ந்த சூழல் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனியப்பனை தோற்கடிக்க வேண்டும் என எம் பி ஆ மணி, எம் ஆர் கே பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கின்றனர். அப்படி ஒரு எண்ணம் இருப்பவர்கள் அரூர் மேற்கு மாவட்டமாக இருக்கும்போது நாடாளுமன்ற தேர்தலில் பழனியப்பனை வாக்கு சேகரிக்க அழைத்திருக்க கூடாது. வடமாவட்டம், மற்றும், கொங்கு மண்டலத்தில் மறைக்க முடியாத அரசியல் மன்னன் பழனியப்பன் அவருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களுக்கு என்ன நிலை என்று நாம் உணரவேண்டும். அதாவது பழனியப்பனிடம் அனைத்து ராஜதந்திரங்களையும் பெற்றுக்கொண்டு வெறுங்கையோடு அனுப்ப திட்டம் தீட்டுகின்றனர். அதிமுக பாமக வெற்றி பெற மறைமுகமாக தருமபுரி திமுக பொறுப்பாளர்களே பெரும் ஆதரவில் உள்ளனர் என்பது கண்மூடி கிடக்கும் அறிவாலயத்திற்கு தெரிய போவதில்லை. வரும் தேர்தலில் அரூர் மக்கள் அதற்கான பாடத்தை புகட்டுவார்கள் பழனியப்பனின் ஆதரவாளர்கள்.

மற்றவர்கள் அவரை மேடையில் அமரவைக்காமல் இருந்தால் கூட அமைச்சர், அழைத்து மேடையில் அமரவைத்திருக்க வேண்டும் ஆனால் பழனியப்பனை மேடையில் அமரவைக்காமல் மேடைக்கு கீழே அமரவைத்து வேண்டுமென்றே அவமானப்படுத்தியுள்ளனர். என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது இந்த சம்பவம் தருமபுரி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இப்படி ஒரு நிகழ்வு எந்த கட்சியிலும் நடைபெறாது தற்போது நாகரிகத்தை மறந்து வருகிறதா திமுக என்ற கேள்வி எழுகிறது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai