தி.மு.க. கூட்டணியில் வி.சி.க.வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! எதார்த்தமாக பேசிய டாகடர் எம் பி திருமாவளவன்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் கூட்டணியில் உள்ள விசிக - திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்த வண்ணமே இருந்து வந்தது. அதாவது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருவதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்து விசிக கேட்ட எண்ணிக்கையை விடக் குறைவான தொகுதிகளே ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால், வி.சி.க. - திமுக இடையே தொகுதிப் பங்கீட்டில் சமரசம் ஏற்படாமல் இருந்து வந்தது. இத்தகைய சூழ்லில் தான் தி.மு.க. - வி.சி.க. இடையேயான கூட்டணியில் 2ஆம் கட்ட தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று (24.03.2026) நடைபெற்றது. இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான விசிக இடையே தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வமாக உடன்பாடு இன்று எட்டப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, விசிகவுக்கு 2 பொது தொகுதிகள், 6 தனித் தொகுதிகள் உட்பட மொத்தமாக 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் ஆகியோர் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கோப்புப்படம்
அதன்படி திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள் என 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முக்கிய அங்கம் வகித்தது.
அதன்படி திமுக கூட்டணியில் விசிக வுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மேலும் விசிக வேட்பாளர்கள் அனைவரும் அந்தக் கட்சியின் தனிச் சின்னமான பானை சின்னத்திலேயே போட்டியிட்டனர். இதில் காட்டுமன்னார்கோவில், செய்யூர், திருப்போரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

