கும்பகோணத்தில் நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள்...!
கும்பகோணம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தியடிகள் சாலையில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசனத்திற்காக வெளியூர் மற்றும் உள்ளூர் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இதன் காரணமாக மார்ச் 9ஆம் தேதி திங்கட்கிழமை காலை முதலே காந்தியடிகள் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகன நெரிசல் அதிகமாக காணப்பட்டது.
இரவு நேரத்திலும் கார்கள், ஆட்டோ ரிக்ஷா மற்றும் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையாக நின்று போக்குவரத்து மந்தமாக நகர்ந்தது. இதனால் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போதுமான காவல்துறை நடவடிக்கை இல்லாததால் நெரிசல் மேலும் அதிகரித்ததாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டினர். போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிருபர் அ, மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

