முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனால் தூள் தூளாய் போன தூள் செட்டி ஏரி..ஆமாவா..? திட்டம் சைலன்ட் மோடில் எம் பி மணி..!
முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனால் தூள் தூளாய் போன தூள் செட்டி ஏரி திட்டம் சைலன்ட் மோடில் எம் பி மணி..!
தருமபுரி மாவட்டம் சட்டமன்ற தொகுதியில் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாலக்கோடு ஒன்றியம் கும்மனூர் பஞ்சாயத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது தூள்செட்டிஏரி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றிலிருந்து வெளியேறும் உபரிநீரை அலியாளம் அணைக்கட்டின் வலது புறகால்வாய் வழியாக தூள்செட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து அதன் மூலம் தர்மபுரி மாவட்ட விவசாயிகளின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்ற கோரிக்கை தர்மபுரி மாவட்ட விவசாயிகளால் பல ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதற்காக இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.56.85 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மொத்தம் 22.45 கி.மீ நீளமுள்ள 56எக்டர் நிலத்தில்
கால்வாய் பணிக்கு 1எக்டர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கோபாசந்திரம் வரை மட்டுமே 2.5 கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நடந்துள்ளது. மீதமுள்ள 55எக்டர் நிலம் கையகப்படுத்தப்படாமல் உள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டிற்கு வரும்போது, சூடானூர், சி. டி.பெட்டம், கொரவாண்ட அள்ளி, சிக்கமாரண்ட அள்ளி வழியாக செட்டிப்பட்டி ஏரி, செங்கன்பசுவந்த லாவ் ஏரிகளுக்கு தூள் செட்டி ஏரியில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து பல்வேறு ஏரி களில் அந்த தண்ணீரை நிரப்பி விவசாயிகளின் வாழ் வாதாரத்தை மேம்படுத்த வாய்ப்பு உருவாகும்.
கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை சரியாக பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதிக அளவில் ஆற்றில் தண்ணீர் செல்கிறது. தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை தூள்செட்டி ஏரிக்கு கொண்டுவருவதன் மூலம் தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான நீர் கிடைக்கும்,
தற்போது பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்து வருகின்றனர்.
தேர்தல் வரும் போது மட்டும் அரசியல் கட்சிகள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விரைவில் இத்திட்டத்தை செயல்படுத்தி விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை தீர்கப்படும் என்று தெரிவிப்பார்கள்,
"கடந்த 25 வருடமாக அதிமுகதான் இங்கு சிட்டிங் எம்.எல்.ஏ," இதுவரை 2 முறை அமைச்சராகவும் இருந்து உள்ளார் கே பி அன்பழகன் . ஆனாலும் இன்று வரை தூள் செட்டி ஏரி கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை, முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனும் தூள் செட்டி ஏரி திட்டத்தில் முதலில் நல்ல முனைப்பு காட்டினார் மக்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டுவந்ததால் பாலக்கோட்டில் வெற்றி பெற்று வருகிறார் ஆனால் இந்த குடிநீர் திட்டத்தில் இவரும் மவுனம் காட்டுகிறார் என்றால் அரசியல் போட்டிதான் நாம் யாரை நம்புவது என்ற குழப்பத்தில் உள்ளனர் வாக்காளர்கள்
அதே போன்று கடந்த 2021 - ம் ஆண்டு எதிர்கட்சியாக இருந்த திமுகவின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தூள்செட்டி ஏரியிலேயே மக்கள் கிராமசபை கூட்டம் கூட்டி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தூள் செட்டி ஏரியில் இருந்து என்னேகொல்புதூர் பாசன கால்வாய் திட்டம், அலியாளம் அனைகட்டு பாசனகால்வாய் திட்டம், தும்பலஏரிக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், புலிகரை ஏரி உட்பட 12 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் என அணைத்து நீர்ப்பாசன திட்டங்களும் உடனே செயல்படுத்துவோம் என்றார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிய போகுது, எள் அளவும் திட்டம் செயல்படுத்துவதில் முனைப்பு காட்டவில்லை, விவசாய பயிர்கள் எல்லாம் கருகி வெந்து கொண்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆ மணி அவர்கள் கே பி அன்பழகனிடம் நல்ல மரியாதை நிமித்தமான உறவில் இருப்பதாக திமுக தொண்டர்கள் சிலர் கூறுகின்றனர். அப்படி இருக்கும்போது உடனடியாக இந்த தூள் செட்டி ஏரி சம்பந்தமாக பேச்சி வார்த்தை நடத்தி மக்களுக்கான குடிநீர் தட்டுப்பாடை குறைக்க எம் பி மணி திமுக பாலக்கோட்டில் நல்ல ஓட்டு எண்ணிக்கையை பெற முடியும், ஆனால் எம் பி மணி மக்களுக்கு தேவையான திட்டத்தை பேசாமல் நான் வன்னியர் சமூகம் என தன்னை மக்களிடத்தில் அடையாள படுத்தி முன்னாள் எம் பி அன்புமணியை விமர்சனம் செய்ததால் வன்னியர் சமூக ஆதரவு திமுகவில் குறைந்து வருவதாக தெரிவிக்கின்றனர் திமுக நிர்வாகிகள். காரணம் மக்களுக்கு, தற்போது சாலை, குடிநீர் , பேருந்து வசதி, மருத்துவ வசதி, உணவகங்களில் நடக்கும் ஊழல் முறைகேடு போன்றவையை கையில் எடுத்து பேசினால் மேலும் மக்களிடத்தில் எம் பி மணிக்கு ஆதரவு பெருகும், ஆனால் திராவிட கொள்கைகளும் மக்களுக்கு முதல்வர் கொண்டு வந்த திட்டங்களையும் பேசாமல் ஆட்டுக்குட்டி அண்ணாமலை போல கூட ஒரு அண்ணாமலையை வைத்து பயணம் செய்வதால் மேடையில் சாதி ரீதியான அடையாளப்பேச்சும் , காலில் விழுகிறேன், கெஞ்சி கேட்கிறேன் என்று பேசும் வசனத்தால் மக்களிடத்தில் அவநம்பிக்கையை பெற்று வருகிறார் எம் பி..! என எம் பி ஆதரவாளர்கள் புலம்புகின்றனர்.... பாலக்கோட்டில் மக்களுக்கு கிடைக்க வேண்டிய குடிநீர் பிரச்சனையில் ஏன் எம் பி மௌனம் காட்டுகிறார் அன்புமணியை விமர்சனம் செய்யும் எம் பி ஏன் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனிடம் தூள் செட்டி ஏரி திட்டத்தை பேச மௌனம் காட்டுகிறார் என்ற சந்தேகம் மக்களிடத்தில் எழுந்துள்ளது...? கூட்டு குடிநீர் பற்றி பேசிய அன்புமணி தூள் செட்டி ஏரி திட்டத்தை பேசாமல் இருப்பதும் அதற்கு இதுவரை எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல் இருப்பது மக்களிடத்தில் அன்புமணி நம்பிக்க்கையை இழந்துள்ளார் என்று பாமக நிர்வாகிகள் தரப்பு விவசாயிகளும் கூறுகின்றனர்
இதோ மீண்டும் 2026 தேர்தல் வாக்குறுதிகளில் தூள் செட்டி ஏரி பாசன கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதிகள் அனைத்து அரசியல் கட்சி தேர்தல் அறிக்கையிலும் இடம் பெறும் மக்களும் நம்பி வாக்களிப்பார்கள், ஆனால் நீர்பாசன திட்டங்கள் நிறைவேறுமா என்பது கேள்விக்குறிதான்.
அரசியலை தாண்டி இப்பகுதி மக்களின் குடிநீர், கால்நடை மற்றும் விவசாய பயிர்களின் தண்ணீர் தேவையை நிறைவேற்றுங்கள் என்பதே அனைத்து தரப்பினரின் வேண்டுகோளாக உள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

