தேர்தல் பயணம் என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத கூட்டத்தில் தர்மபுரியில் திமுக தொண்டருக்கு மண்டை உடைப்பு..! வன்முறையை கட்டுப்படுத்திய மாவட்ட எஸ்பி மகேஸ்வரன்..!

Mar 2, 2026 - 22:30
Mar 2, 2026 - 22:38
 0  79
தேர்தல் பயணம் என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத கூட்டத்தில் தர்மபுரியில் திமுக தொண்டருக்கு மண்டை உடைப்பு..! வன்முறையை கட்டுப்படுத்திய மாவட்ட எஸ்பி மகேஸ்வரன்..!

தேர்தல் பயணம் என்ற தலைப்பில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத கூட்டத்தில் தர்மபுரியில் திமுக தொண்டருக்கு மண்டை உடைப்பு வன்முறையை கட்டுப்படுத்திய மாவட்ட எஸ்பி மகேஸ்வரன்..! 


தர்மபுரி மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சி நடத்திய தேர்தல் பயணம் விவாத பொதுக்கூட்டத்தில் திமுக அதிமுக நாம் தமிழர் கட்சி போன்றோர்கள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். 

இந்த விவாத கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி ஆ மணி அவர்கள் பேசும்பொழுது மாற்றுக் கட்சியினரை சார்ந்த ஒரு சில நபர்கள் வேண்டுமென்றே கூச்சலிட்டதால்  சுதாரித்துக் கொண்ட எம் பி மணி ஏன் இப்படி கூச்சல் போடுகிறீர்கள் நாங்களும் கூச்சிலிட்டால் நல்லா இருக்குமா..?

என்று கூறிய பின்னர் எதிர் தரப்பில் இருந்து நாற்காலியை தூக்கி கூட்டத்தில் அமர்ந்திருந்த அரூர் பகுதியைச் சேர்ந்த திமுக பொறுப்பாளர் மீது நாற்காலி விழுந்ததில் மண்டை உடைப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கே பெரும் கைகலப்பும் வன்முறை நடைபெறும் சூழல் ஏற்பட்டதால் உடனடியாக களத்திற்கு வந்து அங்கே எந்த ஒரு சட்ட ஒழுங்கு வன்முறை ஏற்படாதவாறு மாவட்ட கண்காணிப்பாளர் மகேஸ்வரன் கூட்டத்தை அப்புறப்படுத்தி அங்கிருந்தவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தார்.

மாவட்ட எஸ்பி முன்னெச்சரிக்கையாக காவல் துறையை உடனடியாக களத்தில் இறக்கியதால் பெரும் வன்முறை சம்பவம் ஏற்படுவதை தடுக்க முடிந்தது.

 மேலும் மண்டை உடைக்கப்பட்ட திமுக பொறுப்பாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவரை நேரில் சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்து ஆறுதல் கூறி வந்தார் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மணி அவர்கள். இதுகுறித்து அங்கே கூட்டத்தில் கலந்து கொண்ட பலதரப்பு கட்சிகள் கூறுகையில் நிகழ்ச்சி நடக்கும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முன்னெச்சரிக்கையாக தர்மபுரி ஒரு சென்சிட்டிவான பகுதி என்பதை உணர்ந்து கூடுதலாக காவல்துறையை பாதுகாப்பில் ஈடுபட வைத்திருக்கலாம் மேலும் அந்தந்த கட்சி தொண்டர்களை பாதுகாப்பிற்காக செயல்பட அறிவுரை கூறியிருக்கலாம்.,

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மணி அவர்கள் நிகழ்ச்சியை நடப்பதற்கு முன்பு முன்னதாக பாதுகாப்பு நலன் கருதியும் வேறு ஏதாவது அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக தங்கள் கட்சிக்குள் இருக்கும் முக்கியமான இளம் தலைமுறை திராவிட எழுச்சியாளர்களுடன் கலந்துரையாடி இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து இருக்கலாம்.!

தற்போது இந்த நேரத்தில் இது போன்ற அசம்பாவிதம் தேவை இல்லாமல் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் வாக்கு வங்கியை உடைக்கும் இந்த நேரத்தில் மக்களிடத்தில் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று தொண்டர்களை சந்தித்து அதிகப்படியான ஓட்டுக்களை பெறுவது எப்படி என்று கலந்தாய்வு செய்தால் நிச்சயமாக பல தனியார் தொலைக்காட்சிகள் தர்மபுரியில் வெற்றி பெறப்போகும் திமுகவின் வெற்றியை பெரும் அளவில் விவாதத்தில் பேசத் தொடங்குவார்கள்.

 மேலும் மாவட்ட எஸ் பி மட்டும் இல்லையென்றால் நடந்திருப்பதே வேறு. இதே அவர்கள் வீசிய நாற்காலி கண்ணில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும், விவாத கூட்டத்தில் கருத்து மோதல் இருக்கலாம் ஆனால் வன்முறை மோதல் இருக்ககூடாது எனவே  இதுகுறித்து எம் பி மணி நாற்காலியை வீசிய நபர் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையையும் எழுந்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai