இதுக்கெல்லாம் வாய் திறக்கமாட்டாரா அம்பேத்காரை தூக்கி பிடிக்கும் சி இ ஓ ஈரோடு ஜோதி சந்திரா..? சேலம் சி இ ஓ விற்கு இருக்கும் துணிவு ஏன் தருமபுரி சி ஓ விற்கு இல்ல..!
இதுக்கெல்லாம் வாய் திறக்கமாட்டாரா அம்பேத்காரை தூக்கி பிடிக்கும் சி இ ஓ ஈரோடு ஜோதி சந்திரா..? சேலம் சி இ ஓ விற்கு இருக்கும் துணிவு ஏன் தருமபுரி சி ஓ விற்கு இல்ல..!
தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக குற்றச்சாட்டுகள் குறித்த செய்திகளில் இடம்பெற்ற பள்ளிக்கூடம் தருமபுரி லக்கியம்பட்டி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இதில் படிக்கின்ற மாணவர்கள் சிறப்பாக படித்து வந்தாலும் சில ஆசிரியர்கள், சாதி ரீதியாக மாணவர்களை வழி நடத்தி செல்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் அரசியலமைப்புக்கு எதிராக சில செயல்கள் நடந்தாலும் அதை ஆசிரியர்களே கண்டுகொள்வதில்லை என்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது.
குறிப்பாக ஜனவரி 26 ஆம் தேதி இந்திய ஆட்சிக்கான ஆவணமாக, இந்திய அரசு சட்டம் 1935 இன் மாற்றமாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளாகும். இந்த தினத்தில் லக்கியம்பட்டி தலைமையாசிரியர் கொடியேற்றாமல் வாரிசு அரசியல் போலவும், அரசு பணியில் வாரிசு போஸ்டிங் வாங்குவது போல திமுகவை சேர்ந்த முன்னாள் எம் பி தாமைரைச்செல்வன் தம்பி பெற்றோர் சங்க தலைவராக தனது பதவியை முடித்த பின்பு தம்பியை தொடர்ந்து எம் பி தாமைரைச்செல்வன் பெற்றோர் சங்க தலைவராக தேர்தலின்றி பொறுப்பேற்ற இவர்தான் தேசியக்கொடியை ஏற்றயுள்ளார்.
இது தவறு என்று கூட தெரியாமல் இருக்கிறாரே இவர்தான் முன்னாள் எம்பியா என்ற கேள்வி எழுகிறது இவர் இப்படி செய்தால் அதை கவனிக்கும் மாணவர்களின் மனநிலை அரசியலைப்பு விதிகளை எப்படி உணர்ந்து பயணிப்பார்கள் எல்லாம் அரசியல் பவர் இருந்தால் போதும் எல்லாம் நம்ப கையிலதான் போல என்ற சிந்தனையை இவர்களே உருவாக்குகிறார்கள் திமுகவின் விடியல் ஆட்சியில் இதெல்லாம் நியாயமா என முதல்வரை கேள்வி கேட்கும் நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளனர். இது அரசுக்கும், அரசு விதி முறைகளுக்கும் எதிராகவே உள்ளது. இது குறித்து ஆசிரியர்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம், எல்லாம் சாதி பற்று என்கின்றனர் சி இ ஓ அலுவலக பணியாளர்கள்.
எல்லாத்துக்கும் இரண்டாம் உலகப்போர் போராளியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுக்கும் சி இ ஓ ஈரோடு ஜோதி சந்திரா இந்த ஜனநாயக முறைக்கு எதிராக நடந்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஆனால் ஆத்தூரில் இது போன்ற நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுத்த சேலம் சி இ ஓ விற்கு இருக்கும் துணிவு ஏன் தருமபுரி சி ஓ விற்கு இல்ல...அப்படி என்றால் திமுக கட்சிகளுக்கு இந்த பள்ளிக்கூடத்தையும் திமுக அலுவலகமா மாத்திக்கட்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது இது குறித்து எம் பி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆ மணி என்ன செய்வார்..?
எம் பி ஆதரவாளரிடம் கேட்கும் போது..? முன்னாள் எம் பி தாமரைச்செல்வனுக்கு எது தவறு எது சரியென்று புரிந்திருக்கும் அறிவாற்றல் வேண்டும் அதில் சிறு தவறு நடந்துவிட்டது அவரு பெரிய மனுஷன் அவருக்கு போய் எம் பி ஆ மணி அறிவுரை கூறினால் நல்லாவா இருக்கும் என்கின்றனர் உள்ளூர் திமுக அரசியல் பிரமுகர்கள்..
தற்போது இந்த சம்பவத்திற்கு அதிமுக பாமக, பாஜக, த வெ க கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0