கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Mar 15, 2026 - 15:52
 0  20
கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள்  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணம்: மார்ச், 15 -

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய பாஜக என்டிஏ அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் தமிழக மக்களுக்கு சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து நிதி புறக்கணிப்பு நடைபெறுவதாகவும் குறிப்பிட்டு தமிழ்நாட்டிற்கு திட்டங்களும் இல்லை அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர்களும் இல்லை எனக் கூறி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமை வகித்தார். தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் எம்.எல்.ஏ மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் எம்.பி முன்னிலை வகித்தனர். மேலும் மாநகர செயலாளரும் மாநகராட்சி துணை மேயருமான சுப.தமிழழகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு என்.டி.ஏ அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், மற்றும் தொண்டர்கள், சார்பு அணியினர் பெருமளவில் கலந்து கொண்டனர். 

நிருபர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai