தமிழகத்துக்கு ₹14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் – ஊடகங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடமும் கேள்வி கேட்கணும் நயினார் நாகேந்திரன்

Mar 9, 2026 - 23:29
 0  8
தமிழகத்துக்கு ₹14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் – ஊடகங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடமும் கேள்வி கேட்கணும் நயினார் நாகேந்திரன்

தமிழகத்துக்கு ₹14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளோம் – ஊடகங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடமும் கேள்வி கேட்கணும். நயினார் நாகேந்திரன்

கும்பகோணம்:மார்ச்,9 -

பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 11ஆம் தேதி திருச்சிக்கு வரவிருக்கும் நிலையில், அவரது வருகையை முன்னிட்டு தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மார்ச் 9 ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர், மேலும் இந்த கூட்டமானது பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன் மற்றும் தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் முன்னதாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் காலங்களில் மட்டுமே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார்கள் என புதிய தலைமுறை நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார் அப்போது நயினார் நாகேந்திரன்

 கூறுகையில், “தமிழகம் மற்றும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக மத்திய பாஜக அரசு இதுவரை ₹14 லட்சம் கோடி நிதி வழங்கியுள்ளது. இந்த விஷயங்களை ஊடகங்கள் ஏன் கேள்வி எழுப்புவதில்லை? அதே கேள்விகளை தமிழக முதலமைச்சரிடமும் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடமும் கேட்க வேண்டும்” என்றார்.

மேலும், சில ஊடகங்கள் குறிப்பிட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன என்றும், அதனால் பாஜக குறித்து மட்டுமே கேள்விகள் எழுப்பப்படுகின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசும்போது, மாநிலத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும், இதனால் தமிழ் கலாச்சாரம் சீரழிவதாகவும் குற்றம் சாட்டினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் 34 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன என்றும் கூறி, சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழக அரசை அவர் கடுமையாக விமர்சித்துப்பேசினார்.

நிருபர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai