மகாமக குளத்தில் கழிவுநீர் கலப்பதாக வதந்தி ஆய்வு செய்த திமுக எம்.எல்.ஏ – மோட்டாரில் தேங்கிய நீரே காரணம்
மகாமக குளத்தில் கழிவுநீர் கலப்பதாக வதந்தி
ஆய்வு செய்த எம்.எல்.ஏ – மோட்டாரில் தேங்கிய நீரே காரணம்
கும்பகோணம்: மார்ச் 14 -
கும்பகோணம்: மகாமக குளம் பகுதியில் 14ஆம் தேதி பிற்பகல் 12:30 மணியளவில் புனித குளத்தில் கழிவுநீர் கலப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார்.அப்போது துணை மேயர் சு.ப தமிழழகன் உதவி செயற்பொறியாளர் முத்துமணி, அறநிலைத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மகாமக குளத்திற்கு நீர் நிரப்புவதற்காக 2016-ஆம் ஆண்டு பொருத்தப்பட்ட மின்மோட்டார் பல ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்பட்டதால் அதில் தேங்கியிருந்த நீர் வெளியேறி நிறம் மாறி வந்தது என தெரியவந்தது. சில மணி நேரங்களில் சுத்தமான நீர் வரத் தொடங்கியதை அறிந்த எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அந்த நீரை பரிசோதித்து பார்த்தார். பின்னர் குளத்திற்கு தொடர்ந்து சுத்தமான நீர் நிரப்ப வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் குளத்தில் கருப்பு நிறத்தில் வந்த நீரை உடனடியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை கொண்டு அகற்றி, போதிய அளவில் சுத்தமான நீர் நிரப்பவும், பக்தர்கள் பாதிக்காத வகையில் கிருமிநாசினி தெளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிருபர் அ. மகேஷ்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0

