இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் மோதல்- முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கை முறிவு தலைமையாசிரியரிடம், சிறந்த சி இ ஓ விருது வாங்கிய சி இ ஓ விசாரணை நடத்துவாரா

Feb 1, 2026 - 12:37
Feb 1, 2026 - 16:34
 0  219
இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் மோதல்- முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கை முறிவு தலைமையாசிரியரிடம்,  சிறந்த சி இ ஓ விருது வாங்கிய  சி இ ஓ விசாரணை நடத்துவாரா

இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் மோதல்- முதல்வர் திறனாய்வு தேர்வு எழுத வந்த மாணவனுக்கு கை முறிவு

தருமபுரி மாவட்டத்தில் உள்ள இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட 18 அரசு பள்ளிகளில் இன்று தமிழக முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு காலை மற்றும் மதியம் என இருவேளைகளில் நடந்தது. இதில் இலக்கியம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுத இலக்கியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி அருகே உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 220 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று காலை நடந்த தேர்வில் 215 மாணவர்கள் பங்கேற்றனர்.

காலையில் நடந்த தேர்வில் பங்கேற்ற நூலஹள்ளி பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் காலை தேர்வு முடித்துவிட்டு மதியம் தீர்வுக்காக பள்ளி நுழைவாயில் அருகே உள்ள கொடிக்கம்பம்   பீடத்தின் மீது அமர்ந்திருந்திருந்துள்ளார். அப்பொழுது இலக்கியம்பட்டி அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், 10க்கும் மேற்பட்டோர் ரேக்கிங் செய்து நூலஹள்ளியை சேர்ந்த அந்த மாணவனை சுற்றி, கடுமையாக தாக்கியுள்ளனர். அப்பகுதியில் இருந்தவர்கள் காயம் அடைந்த அந்த மாணவனை மீட்டு தருமபுரி  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தலைமையாசிரியரிடம் சி இ ஓ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது   இந்த விடியா திமுக ஆட்சியில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது என  பாதிக்கப்பட்ட மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai