ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம்.எம்.பி

Mar 12, 2026 - 12:19
 0  68
ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம்.எம்.பி

ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம்.எம்.பி

மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் டெல்லியில் ஒன்றிய அமைச்சர்களை நேரில் சந்தித்து தமிழ்நாட்டின் சமூக மற்றும் கட்டமைப்பு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

டெல்லியில் நடைபெற்ற சந்திப்பில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை திமுக மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் நேரில் சந்தித்து பல்வேறு முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தார். அதில், தமிழ்நாட்டில் சமூக வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படும் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு நிறுவனங்கள் வழங்கும் சமூக பொறுப்புணர்வு நிதி சி.எஸ்.ஆர்க்கு வரிவிலக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தமிழ்நாட்டில் சாலை, குடிநீர், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நிதி பெரும் பங்காற்றி வருவதால், அந்த நிதிக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டால் மாநிலத்தில் சமூக வளர்ச்சி பணிகள் மேலும் வேகமாக நடைபெற வழிவகுக்கும் என அவர் அந்த மனுவில் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் பல்வேறு பொதுநல திட்டங்கள் விரைந்து செயல்படுத்தப்பட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அதேபோல் தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பல்வேறு வளர்ச்சி திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் சார்பில் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஒன்றிய நிதி அமைச்சரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.இதனைத் தொடர்ந்து, ஒன்றிய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களையும் மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் நேரில் சந்தித்து தஞ்சாவூர் மாவட்டத்தின் இரயில்வே மேம்பாட்டு பணிகள் தொடர்பாக மனு அளித்தார்.அந்த மனுவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் இரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிய வருகிறது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தின் வர்த்தக மற்றும் விவசாய வளர்ச்சிக்கு முக்கியமானதாக இருக்கும் (குட்செட்) அமைக்கும் திட்டம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்றும், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகையில் இருவழி இரயில்பாதை அமைக்கும் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு வழங்கினார். மேலும் இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் தஞ்சாவூர் மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக அமையும் என்றும், விவசாய உற்பத்தி மற்றும் பொருட்கள் போக்குவரத்து எளிதாக நடைபெற உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சமூக வளர்ச்சி மற்றும் இரயில்வே கட்டமைப்பு மேம்பாட்டை முன்னேற்றும் இந்த கோரிக்கைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஒன்றிய அமைச்சர்கள் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்ட நிருபர் 

அ. மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai