குழந்தைகள் தின விழா: அரசுப் பள்ளி குழந்தைகளிடையே ஏமாற்றம்! தனியார் பள்ளியில் அமைச்சர் ர.வினோத் பங்கேற்றுக் கொண்டாடியதால் பொதுமக்களிடையே சர்ச்சை!

Nov 13, 2026 - 18:12
 0  45
குழந்தைகள் தின விழா: அரசுப் பள்ளி குழந்தைகளிடையே ஏமாற்றம்!  தனியார் பள்ளியில் அமைச்சர் ர.வினோத் பங்கேற்றுக் கொண்டாடியதால் பொதுமக்களிடையே சர்ச்சை!

குழந்தைகள் தின விழா: அரசுப் பள்ளி குழந்தைகளிடையே ஏமாற்றம்!

தனியார் பள்ளியில் அமைச்சர் ர.வினோத் பங்கேற்றுக் கொண்டாடியதால் பொதுமக்களிடையே சர்ச்சை!

கும்பகோணம், நவ. 13 -

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள சரஸ்வதி பாடசாலா பள்ளியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் பங்கேற்று குழந்தைகள் தின விழா கொண்டாடிய விவகாரம்,அரசுப் பள்ளி குழந்தைகள், மற்றும் மாணவ, மாணவிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகப் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.

கும்பகோணம் அன்னை அஞ்சுகம் நகரில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள், மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதேபோல், அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசுப் பள்ளிகளுக்கு அமைச்சர் வினோத் முக்கியத்துவம் கொடுக்காமலும், குழந்தைகள் தின விழாவை அரசுப் பள்ளிகளில் நடத்தி, அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுடன் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனியார் பள்ளியான சரஸ்வதி பாடசாலையில் அமைச்சர் வினோத் பங்கேற்றுக் கொண்டாடியது சர்ச்சைக்குரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சரஸ்வதி பாடசாலையில் நடைபெற்ற விழாவில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்குத் தனியார் பங்களிப்புடன் கேக் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் தின விழாவில் அமைச்சர் தரப்பில் ஒரு செலவும் இல்லை எனவும் கூறப்படுகிறது மேலும்

அமைச்சர் வினோத் அவ்வப்போது இந்தப் பள்ளிக்கு வந்து செல்வதாகவும், இதனால் சரஸ்வதி பாடசாலை பள்ளி கும்பகோணத்திலேயே முதலிடத்தில் உள்ளதாக ஒரு மாய பிம்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கி, அதனால் பெண் தாளாளருக்கு பிசினஸ் அடித்தளமாக இந்தப் பள்ளி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பெற்றோர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்தப் பள்ளியில் தங்களது குழந்தைகளைச் சேர்க்க ஆர்வம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த மாணவ, மாணவிகளும் குழந்தைகள் தினக் கொண்டாட்டத்துக்கு உரியவர்கள்தான். குறிப்பாக, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு அமைச்சர் வினோத் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டாமா? என்பதே தற்போது பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வியாக உள்ளது.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai