ஊத்தங்கரை அருகே சிறுவர்கள் மீது அதியமான் பள்ளி பேருந்து மோதி விபத்து பள்ளி பேருந்தின் மீது நடவடிக்கையா சிறுவர்களுக்கு வாகனம் கொடுத்த பெற்றோர்கள் மீது நடவடிக்கையா...?
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளி பேருந்தும் இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் 3 சிறுவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரபு, மீனாட்சிசுந்தரம் ரஞ்சித் உள்ளிட்ட 3 சிறுவர்கள் நேதாஜி நகர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, தனியார் மருத்துவமனை அருகே உள்ள வளைவில் திரும்பிய *ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளிக்கு சொந்தமான பேருந்தும்*, எதிரே வந்த இருசக்கர வாகனமும் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் உடனடியாக 3 சிறுவர்களையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாத சிறுவர்களிடம் இருசக்கர வாகனம் கொடுப்பது சட்டப்படி குற்றமாகும் மேலும் சிறுவர்களிடம் இருசக்கர வாகனம் கொடுக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை கூறினாலும் காவல்துறை எச்சரிக்கை விடுத்தாலும் பல இடங்களில் சிறுவர்கள் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை இயக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
பள்ளிப் பேருந்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவி உள்ளதா என்பதையும் காவல்துறை ஆய்வு செய்ய வேண்டும் அதி வேகமாக இயக்கினாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக கூட இருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை செய்தால் சரியாக இருக்கும் என பாதிக்கப்பட்ட சிறுவர்களின் தரப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது
மேலும் அதியமான் பள்ளி பேருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியதில் சிறுவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் ஆனால் இந்த சம்பவம் குறித்து ஊத்தங்கரை காவல்துறை வழக்கு பதிவு செய்து அதியமான் பள்ளி பேருந்து ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இருப்பினும் சிறுவர்களுக்கு இரு சக்கர வாகனங்களை கொடுத்த பெற்றோர்களிடம் காவல்துறை விசாரிக்குமா என்ற கோணத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர் யாராக இருந்தாலும் எவராயினும் சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுத்து அவர்களுக்கு தலைக்கவசம் இல்லாமலும் ஓட்டுனர் உரிமை இல்லாத சிறுவர்களிடம் இருசக்கர வாகனத்தை கொடுப்பது குற்றமல்லவா தற்பொழுது பள்ளி பேருந்து மோதியதில் பலத்தம் காயம் அடைந்த சிறுவனுடைய பெற்றோர்களுடைய உணர்வுகளையும் அவங்களுடைய வாழ்வியலையும் உணர்ந்தால் நிச்சயம் வரும் காலங்களில் ஊத்தங்கரை பகுதியில் சிறுவர்களிடம் இருசக்கர வாகனங்களை கொடுக்கும் பெற்றோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊத்தங்கரை காவல்துறை எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை
இந்த விபத்து குறித்து அரூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ஊத்தங்கரை அதியமான் தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிட்டத்தக்கது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0