எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

Aug 6, 2026 - 20:28
 0  1

சென்னை: மத்திய அரசு மேற்கொள்ள உள்ள தொகுதி மறுவரையறைப்பணி குறித்து ஆலோசிக்க தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தப்பணிகள் மற்றும் அதனால், தமிழகத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்து தமிழகத்தை சேர்ந்த லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களின் கலந்தாய்வு கூட்டம் வரும் 8 ம் தேதி ( சனிக்கிழமை ) பிற்பகல் 3 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் வாயிலாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து எம்பிக்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai