மாரியம்பட்டியில் 18 அடி தெரு பாதையே காணோம் ஒரே ஜாதி என்பதால் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் மனு கொடுத்தும் பயனில்லை ஆட்சி கோளாறா..? அதிகார திமிரா..?
மாரியம்பட்டியில் 18 அடி தெரு பாதையே காணோம்
ஒரே ஜாதி என்பதால் வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க தயக்கம் மனு கொடுத்தும் பயனில்லை ஆட்சி கோளாறா..? அதிகார திமிரா..?
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மாரியம்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ள இரண்டு வீதி தெருவில் வீடுகள் ஆக்கரமிப்பு செய்து சாக்கடை கால்வாய் வசதிகள் செய்வதற்கு கூட வழியில்லாமலும் வீடுகள் கட்டுமான பொருட்களை ஏற்றி வர வாகன வசதிகளுக்கு வழித்தடம் இல்லாமலும் பெரும் சிரமமாக உள்ளது. இது குறித்து கடந்த ஆண்டு நில அளவையர் கிராம அலுவலர் பாதையை அளந்து ஆக்கரமிப்பு பணிகளுக்கான பணியை விரைவில் செய்து தருகிறோம் என கூறினார்கள். ஆனால் மேல்நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர் காரணம் தாலுகா முதல் கிராம அலுவலகம் வரை ஒரே சமூகமாக இருப்பதால் எப்படி போய் வீட்டை இடிப்பது எல்லாம் பாமர மக்கள் என அப்படியே விட்டுவிட்டனர். இப்படி விடுவதால்தான் எல்லா அரசு நிலமும் வீணாய் போகிறது என்பது குறித்து ஏன் படித்த வருவாய்துறையினருக்கு தெரிவதில்லை. தமிழகத்தில் அரசு மூன்று சென்ட் நிலம் கொடுத்தும், இலவச வீடு கொடுத்தாலும் கொஞ்சம் இருக்குற ரோடு நிலத்தில குடிநீர் பாத்திரம் முதல், கழிவறைக்கு பயன்படுத்தும் டப்பா முதல், துணி துவைப்பது போன்ற வேலையை கிராமத்தில் படித்த முட்டாளும் படிக்காத தற்குறிகளும் ரோட்டை ஆக்கரமிப்பு செய்து பொழப்பு நடத்தினால்தான் இவங்களுக்கு தூக்கம் வருது இப்படிப்பட்ட நபர்கள் செய்யும் செயலால் அருகில் உள்ளவர்கள் வழித்தடம் இல்லாமல் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள், எதிர்காலத்தில் நமக்கும் அந்த பிரச்சனை வரும் என்ற குற்ற உணர்ச்சி இல்லாத இந்த நபர்களுக்கு அரசு தக்க பாடம் புகட்ட வேண்டும் குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் சாலை ஆக்கரமிப்புகளை மீட்டெடுத்து சாக்கடை கால்வாய் அமைத்து, வீட்டுக்கொரு கழிப்பிறை கட்டாயம் இல்லையெனில் ரேஷன் அட்டை தடை செய்யப்படும் என அறிவிப்பு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அதாவது ஆடுற மாட்ட பாடிதான் கறக்கணும் அடிக்கிற மாட்ட அடிச்சுதான் கறக்கணும் என்பதை அதிகாரிகள் உணர்ந்து சாலைகளை ஆக்கரமிப்பு செய்த வீடுகளை இடித்து சாலையை மீட்க வேண்டும். குறிப்பாக மாரியம்பட்டி கிராமத்தில் பெரும் சிரமமான நிலை உருவாகியுள்ளது எனவே ஏற்கனவே லந்து விட்டு மார்க் செய்து சென்ற வீடுகளுக்கு சம்மன் கொடுத்து சாலையை மீட்டெடுக்க வட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவும் இது போன்ற நிலை தருமபுரியில் அதிகாமாக உள்ளதால் மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என மாறியமைப்பட்டி பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர் `
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0