தர்மபுரி மாவட்டம் A.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பள்ளி மாணவிகளிடம் தகாத முறையில் நடந்த இரண்டு பேர் மீது வழக்கு இல்லை. ஆனால் இரண்டு பேரிடம் தீ....விர விசாரனை மட்டுமே _பள்ளிக்கூடம் செல்ல மாணவிகள் அச்சம்..!
தர்மபுரி, நவ. 5-*
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிபட்டி நடுவூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள், அதிகாரப்பட்டி அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். இதில் 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 10, 11 வயதுடைய 5 குழந்தைகள் தினமும் ஒன்றாக பள்ளிக்கு சென்று வருவது வழக்கம்.
4.10.2026 அன்று நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பைக்கில் வந்த அதிகாரபட்டியை சேர்ந்த பாவேந்தன் (46)
கனகராஜ் (43) இருவர் குழந்தைகளிடம் தகாத வார்த்தைகள் பேசி, தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன குழந்தைகள் வீட்டிற்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்கச் சென்றபோது, அவர்களும் தகாத வார்த்தைகள் பேசி தகராறில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர் அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, குழந்தைகளிடம் விசாரணை நடத்தினர். பெற்றோர் சார்பில் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பாவேந்தன் (46)
கனகராஜ் (43) இருவர் மீதும் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை தற்போது விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது
குழந்தைகள் பள்ளிக்கு செல்லவே பயப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0