கும்பகோணத்தில் ‘கிரீம் பாய்’ பேக்கரி கடை திறப்பு விழா

Sep 28, 2026 - 17:21
 0  22
கும்பகோணத்தில் ‘கிரீம் பாய்’ பேக்கரி கடை  திறப்பு விழா

கும்பகோணத்தில் ‘கிரீம் பாய்’ பேக்கரி கடை திறப்பு விழா 

கும்பகோணம், செப். 28 -

கும்பகோணம் ஆயிகுளம் சாலையில், ஐசிஐசிஐ வங்கி எதிரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் ‘கிரீம் பாய் – ஃப்ரெஷ் கேக்ஸ் & பேக்ஸ், ஸ்வீட்ஸ்’ என்ற பேக்கரி கும்பகோணத்தில் மூன்றாவது கிளை திறப்பு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது.

பல்தளக் கட்டடத்தில், நவீன கட்டமைப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த பேக்கரியை, கும்பகோணம் ஸ்ரீ சாமுண்டி பேக்கிங் எக்யூப்மெண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜி.எஸ். சபாபதி திறந்து வைத்தார்.

புதிய பேக்கரியில் பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்குத் தேவைப்படும் விதவிதமான ஃப்ரெஷ் கேக்குகள், பேக்கரி உணவுப் பொருள்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கேற்ப பல்வேறு வகையான கேக்குகள் மற்றும் பேக்கரி பொருள்களை ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் நவீன வசதிகளுடன் பேக்கரி அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பேக்கரி பொருள்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் தரம், சுகாதாரம் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட உள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

திறப்பு விழா நிகழ்வில் வர்த்தக சங்க நிர்வாகிகள், ரோட்டரி சங்கத்தினர், லயன்ஸ் சங்கத்தினர், பேக்கரி நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கும்பகோணத்தில் மூன்றாவது கிளை அமைந்ததை தொடர்ந்து பேக்கரி கடை உரிமையாளருக்கு வர்த்தக சங்கத்தினர் சால்வை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர் மேலும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் புதிய பேக்கரியை ஆர்வத்துடன் பார்வையிட்டு, அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான கேக்குகள் மற்றும் இனிப்புகளை தேவைக்கு ஏற்றவாறு வாங்கி சென்றனர்

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai