தஞ்சை மாவட்டத்தில் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு வேளாண் அமைச்சர் ர. வினோத் திருவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

Sep 28, 2026 - 13:36
Sep 28, 2026 - 13:39
 0  57
தஞ்சை மாவட்டத்தில் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு  வேளாண் அமைச்சர் ர. வினோத் திருவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்
தஞ்சை மாவட்டத்தில் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு  வேளாண் அமைச்சர் ர. வினோத் திருவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் ரூ.16.14 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு 

வேளாண் அமைச்சர் ர. வினோத் திருவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்

திருவிடைமருதூர், செப். 28 -

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் பேரூராட்சியில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிட திறப்பு விழா திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இதையடுத்து, புதிய கட்டிடம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து

நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடந்த நிதியாண்டில் கட்டப்பட்ட இந்த பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றும் மக்கள் பயன்பாட்டிற்கு வராத நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ச. ஜோசப் விஜய் தலைமையில் அமையப்பெற்ற தமிழக வெற்றி கழக அரசு நல்லாட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் கவனத்துக்கு இப்பணி கொண்டு செல்லப்பட்டு, தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கட்டிடம் பொது பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் ஆணைக்கிணங்க நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ.ஆ.ப. முன்னிலை வகித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத், புதிய பேரூராட்சி அலுவலகக் கட்டிடத்தையும் பிற கட்டிடங்களை காணொளி வாயிலாகவும் திருவிளக்கு ஏற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அமைச்சர் ர. வினோத் பேசுகையில், தமிழக வெற்றி கழக ஆட்சியில் முதல்வர் ஜோசப் விஜய் ஆணைக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த நிதியாண்டில் கட்டி முடிக்கப்பட்ட 54 அரசு அலுவலகக் கட்டிடங்கள், திருபுவனம் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று காணொலி வாயிலாக ஒரே நேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ.16 கோடியே 14 லட்சம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான நல்லாட்சியில் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து திட்டங்களையும் விரைவாக செயல்படுத்த அரசு முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மதுரையில் இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம் குறித்தும் அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தஞ்சை கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆர். விஜய் சந்திரன் கலந்து கொண்டார்.தொடர்ந்து, திருபுவனம் பேரூர் கழகச் செயலாளர் ஏ. மதுசூதனன், துணைச் செயலாளர் அரவிந்த், பொருளாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர்கள் முரளிதரன், மகேஷ்பூபதி, வெங்கடேஷ், ரெங்கசாமி, சபாநாயகம், ஸ்ரீராம், விஜய், சௌமியா ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், வார்டு செயலாளர்கள் திலீப், சக்திவேல், கார்த்தி, உதயகுமார், சிவராம், இளைஞர் அணி அமைப்பாளர் இந்திரகுமார் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.திருபுவனம் பேரூராட்சி பெருந்தலைவர் அமுதவல்லி கோவிந்தன், துணைத் தலைவர் மூ.ர. ரவிசங்கர் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai