பார் உரிமையாளர்களை மிரட்டி 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிப்பு லஞ்சத்தில் கப்பலோட்டம் ஏ பள்ளிப்பட்டி எஸ்ஐ குபேந்திரன் என்ன செய்கிறது உயர மட்ட காவல்துறை..!

Nov 13, 2026 - 12:40
 0  157
பார் உரிமையாளர்களை மிரட்டி 60 ஆயிரம் ரூபாய் பணம் பறிப்பு லஞ்சத்தில் கப்பலோட்டம் ஏ பள்ளிப்பட்டி எஸ்ஐ குபேந்திரன் என்ன செய்கிறது உயர மட்ட காவல்துறை..!

தர்மபுரி மாவட்டம் அ.பள்ளிப்பட்டி காவல் நிலையம் தர்மபுரி சுற்றுவட்டார காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய சைலன்ட் பிசினஸ் கூடாரம் போல் செயல்படுவதாக இப்பகுதி மக்கள் பெரும் குற்றம் சாட்டு வைக்கின்றனர்.

அதை தாண்டி படித்து தேர்வு எழுதி இந்த அ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்திற்கு வரும் முதல் நிலை காவல் அதிகாரி மற்றும் எஸ் எஸ் ஐ காவல் அதிகாரி வரை இருக்கும் இவர்களை உயர் அதிகாரி பொறுப்பில் இருக்கும் எஸ்ஐகாக்கள் தன்னுடைய ஆதிக்கத்தை பயன்படுத்தி தங்களை அடிமையாக செயல்படுத்தி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சந்துக்கடைகளில் இதற்கு முன்பு 3 லட்சம் கொடுத்தாங்க நீங்க எப்படி மாதம் ஒரு லட்ச ரூபாய் கொடுப்பீங்களா என்று கேட்டுள்ளார் எஸ் ஐ குபேந்திரன் கேட்டதாக குற்றச்சாட்டு வைத்தனர்.

11 டூ 11 பார் மூடப்பட்டதற்கு முக்கிய காரணமாக சுற்று வட்டாரத்தில் இருக்கும் ஒரு சில கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்குள் அரசியல் ரீதியாக முன் விரோதம் உள்ளதாக கூறுகின்றனர். 

மேலும் அவர்கள் 11 to 11 மதுபான பாரில் மது அருந்துவது வழக்கமாம் தொடர்ந்து மதுரையை சேர்ந்த பணியாளர்களிடம் ஓவர் சீன் போட்டு நாங்கள் இந்த ஏரியாவ குத்தகைக்கு எடுத்து இருக்கிறோம் என்று கூறி ஓசியில் சரக்கு கேட்டு வாக்குவாதம் செய்து மதுரையை சேர்ந்த பணியாளர்களை தாக்கியுள்ளனர்.

இது காவல் துறைக்கும் தகவல் கொடுத்தாக பார் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மற்றொரு உள்ளூர் குழுவினர் என்னடா நீங்க வந்து இங்க சீன் போடுறீங்க நாங்க என்ன இழிச்ச வாயர்களா என மற்றொரு குழுவிடம் சண்டையிட்டு மறைமுகமாக ஒவ்வொரு குழுவாகா பார் உரிமையாளரிடம் "அண்ணே எங்கள மீறி அவங்களுக்கு பணமோ சரக்கோ கொடுக்க கூடாது என்று மாறி மாறி மிரட்டல் விடுத்துள்ளனர். 

இதை எஸ் ஐ குபேந்திரன் அவர்களிடம் கூறினோம் ஆனால் அவர் இந்த விசியத்தை வைத்து நன்றாக விளையாடி விட்டார் என்றனர் பார் உரிமையாளர்கள்.

பிறகு புதுப்பட்டி நெடுஞ்சாலையில் மேலே குறிப்பிட்ட இரு குழுவிற்கும் அடிதடி பிரச்னையாக மாறி உள்ளது இதனை வைத்து காவல்துறை தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 11 டூ 11 பார் உரிமையாளர்களை ரகசியமாக கை தடவி எவ்வளவு கொடுப்பீங்க என்று ஆரம்பித்துள்ளது. ஆனால் அது சரியாக செயல்படாததால் நேரடியாக களத்தில் இறங்கி மெதுவாக தனது ராஜ தந்திர ஸ்டைலில் பணம் வாங்கும் முறையை கடலில் கப்பல் இயக்கும் வகையில் நகர்த்தியுள்ளார் எஸ்ஐ குபேந்திரன். 

அடிக்கடி மதுபான பாரில் இந்த பிரச்சனை ஏற்படுவதை அறிந்த எஸ் ஐ குபேந்திரன் பார் உரிமையாளர்களிடம் ஸ்டேசனுக்கு மாதம் எக்ஸ்பென்ஸ் 20000 ஆயிரம் கொடுங்க இல்லையென்றால் காவல்துறை சப்போர்ட் கிடைக்காது எல்லாமே இந்த ஸ்டேசனுக்கு நான்தான் என கெத்தாக கூறியதாக பார் உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதனால் பயந்து போன பார் உரிமையாளர்கள் எஸ் ஐ குபேந்திரன் அ.பள்ளிப்பட்டி ஸ்டேசனுக்கு மாச செலவுதானே கேட்கிறார் என்று 3 மாதம் தொடர்ந்து 20000 ஆயிரம் வீதம் 60 ஆயிரமாக கொடுத்துள்ளனர். 

ஆனால் பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் சக காவலர்களுக்கு இந்த பணத்தில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லையாம். 

இந்த நிலையில் கோபம் கொண்ட சில எஸ் எஸ் ஐ காவலர்கள் எங்களையெல்லாம் கவனிக்காம எஸ் ஐ குபேந்திரனுக்கு மட்டும் கவினிச்சிங்கில்ல அதுக்குத்தான் உங்க 11 டூ 11 பார் நாசமா போச்சி என்று சாபம் இட்டுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பார் உரிமையாளர்கள் எஸ் ஐ குபேந்திரன் காவல் நிலையத்திற்கு என்று வாங்கிய 60 ஆயிர ரூபாய் இவரே செலவு செய்துள்ளாரே என உணர்ந்துள்ளனர். 

இந்த 11 டூ 11 பார் மூடியதால் பார் உரிமையாளர்கள் எங்களுக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது அதில் 2.1/2 கோடி அரசுக்கு நஷ்டம் என்று கண்ணீர் விடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அருகில் உள்ள சில கிராம இளைஞர்கள் தொடர்ந்து பார் உரிமையாளர்களிடம் ஓசியில் சரக்கு கேட்பது, தின்பண்டங்களுக்கு, பில் கட்டாமல் வாக்குவாதம் செய்வது, டொனேஷன் என்று பல மிரட்டல்களை கொடுத்து வந்துள்ளனர். இவர்களை போன்ற சில்லறைகளை கண்டுபிடித்து காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் பாரில் அடிக்கடி அடிதடி பிரச்சனை என்று வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படி பார் இழுத்து மூட வாய்ப்பிருந்திருக்காது. 

ஆனால் உள்ளூர் நபர்கள் எந்த முறையில் பிரச்சனை கொடுத்தாலும் அது போன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அ.பள்ளிப்பட்டி காவல்நிலையத்தில் வட்ட மேசை மாநாடு போல பைசல் போட்டு சில கட்சி பொறுப்பாளர்களை வைத்து வசூல் ராஜா எம் பி பி எஸ் ஆக உள்ளார் குபேந்திரன் என்று கூறுகின்றனர். 

மேலும் எந்த புகார் காவல்நிலையத்திற்கு வந்தாலும் ஒருவர் பக்கம் நியாயமே இருந்தாலும் உங்க மேல வழக்கு பாயும் என பயமுறுத்தி 5000 முதல் 10000 ஆயிரம் வரை தானாகவே பணம் கேட்பாரம் காவல் நிலையத்தை தேடி வரும் பாமர மக்களிடத்தில். 

மேலும் சாலையோரத்திலோ ஏதோ ஒரு தனியார் தோட்டத்திலோ மது பிரியர்கள் மது அருந்தினால் அவர்கள் மீது வழக்கு போடப்போறோம் என கூறி அவர்களுக்கு அபராதம் விதிக்காமல் 15000 ஆயிரம் மற்றும் 20000 ஆயிரம் வரை டீல் பேச தொடங்கவாராம் இந்த விஷயத்தில் எஸ் ஐ குபேந்திரன் பக்காவான தந்திர காரராம்.. தற்போது இந்த சம்பவம் மேலிட அதிகாரிகளுக்கு தெரிந்ததால் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்போது தமிழகத்தை ஆட்சி செய்து வரும் ஜோசப் விஜய் லஞ்சம் வாங்குபவர் எவராக இருந்தாலும் விடமாட்டோம் என்று கூறியுள்ளார். இன்றைக்கு H.புதுப்பட்டி 11 to 11 தனியார் மதுபான கடைக்கு தொடர்ந்து உள்ளூர் நபர்கள் மிரட்டுவதும், எஸ் ஐ குபேந்திரன் தொடர்ந்து 3 மாதமாக 20000 ஆயிரம் ரூபாய் வாங்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் மீது தமிழக அரசின் உயர் மட்ட குழு மற்றும் டிஜிபி, ஐ ஜி, எஸ் பி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது...! 

இதுல ட்விஸ்ட் என்னனா..? பார் உரிமையாளரில் ஒருவரின் மச்சான்தான் முதல்வர் ஜோசப் விஜய்க்கு பர்சனல் செக்கியுரிட்டியாக உள்ளாராம்.. 

"இந்த மேட்டர் அவர்கிட்ட போயிருக்காம்" என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்..!

மேலும் எவிடன்ஸ் பார்வை குழு முழுமையான தகவல்களை டிஜிபி டேபிலுக்கு அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai