கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கத்திக்குத்து! பணியிட மாறுதல் தகராறில் வெறிச்செயல்: ஓட்டுநர், நடத்துநர் தப்பியோட்டம்!

Oct 12, 2026 - 20:06
 0  40
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கத்திக்குத்து! பணியிட மாறுதல் தகராறில் வெறிச்செயல்: ஓட்டுநர், நடத்துநர் தப்பியோட்டம்!
கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கத்திக்குத்து! பணியிட மாறுதல் தகராறில் வெறிச்செயல்: ஓட்டுநர், நடத்துநர் தப்பியோட்டம்!

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கத்திக்குத்து! பணியிட மாறுதல் தகராறில் வெறிச்செயல்: ஓட்டுநர், நடத்துநர் தப்பியோட்டம்!

கும்பகோணம், அக். 12 

கும்பகோணத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை பணியிட மாறுதல் தொடர்பான தகராறில், பேருந்து ஓட்டுநர், நடத்துனர் இருவரும் கிளை மேனேஜரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடிய சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கும்பகோணம் சி ஆர் சி டிப்போ அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை எண் 1-இல் கிளை மேலாளராகப் பணியாற்றி வருபவர் பாரதி நகரைச் சேர்ந்த சுரேஷ் (58). இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் கும்பகோணம் சி ஆர் சி பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், சம்பவத்தன்று திங்கள்கிழமை காலை சுமார் 11 மணியளவில், சிஆர்சி பணிமனை அலுவலகத்தில் மேனேஜர் சுரேஷ் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த இரண்டு நபர்கள், மேலமாத்துரை சேர்ந்த ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன் (45), கும்பகோணத்தை சேர்ந்த நடத்துநர் பிரதாப் (45) ஆகிய இருவரும் மேனேஜர் சுரேஷிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது தனக்குக் காரைக்குடி கிளை அலுவலகத்துக்குப் பணியிட மாறுதல் வழங்கப்பட்டதற்கு கிளை மேலாளர் சுரேஷ்தான் காரணம் எனக் கூறி, டிரைவர் செந்தமிழ்ச்செல்வன் மேனேஜர் சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், செந்தமிழ்ச்செல்வன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுரேஷைக் குத்த முயன்றுள்ளார். அப்போது, தடுக்க முயன்ற சுரேஷ் அவரது இடது மணிக்கட்டில் கத்திக்குத்து விழுந்தது

இதில் காயமடைந்த சுரேஷ் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அருகிலிருந்த பணிமனை ஊழியர்கள் விரைந்து வந்து அவரைக் காப்பாற்றினர். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் பிடிக்க முயன்றபோது, எதிரிகள் அங்கிருந்து தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, காயமடைந்த சுரேஷை பணிமனை ஊழியர்கள் மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீஸார், சுரேஷிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அரசு பேருந்து ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன், நடத்துநர் பிரதாப் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

சட்டம்-ஒழுங்கு குறித்து சமூக ஆர்வலர் கவலை 

கும்பகோணத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளரையே பணியிடத்தில் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர் ஒருவர், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருவதாகவும், அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கே பணியிடத்தில் உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் தமிழக அரசு ஊழியர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் கவனம் செலுத்தி சட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தமிழகத்தில் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு இந்த சம்பவத்திற்கு மிகவும் கவலை தெரிவித்தார் 

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 1
Sad Sad 1
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai