கும்பகோணத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் மீது தாக்குதல் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பொறுப்பு கேட்டதற்காக அடித்து கொலை மிரட்டல் – 3 பேர் மீது வழக்கு
கும்பகோணத்தில் ஆளுங்கட்சி பிரமுகர் மீது தாக்குதல்
பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பொறுப்பு கேட்டதற்காக அடித்து கொலை மிரட்டல் – 3 பேர் மீது வழக்கு
கும்பகோணம், செப். 27
கும்பகோணத்தில் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் KMBF ல், பொறுப்பு கேட்டதற்காக தமிழக வெற்றிக் கழக மாநகர செயலாளர் முருகானந்தம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் மாநகர் பாணாதுறை புதுத்தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம் (41). கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு கும்பகோணம் மாநகர செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், சம்பவத்தன்று 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.52 மணியளவில் முருகானந்தம் தனது டொயோட்டா ரூமியான் காரில், கும்பகோணம் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள காவிரி புதுப்பாலம் வழியாக பாலக்கரையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது, ஸ்கூட்டரில் பின்தொடர்ந்து வந்த 3 பேர், திடீரென அவரது காரின் ஓட்டுநர் பக்கமாக முன்னோக்கி வந்து காரை வழிமறித்து தாக்கியதாகவும், கார் கண்ணாடியை உடைத்து முருகானந்தத்தின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலி அறுந்து காருக்குள் விழுந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள், “உனக்கு KMBF-ல் பொறுப்பு கேட்கிறதா?” எனக் கூறி அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிய வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முருகானந்தத்தை மீட்டு, கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்
இதுதொடர்பாக முருகானந்தம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நால்ரோடு கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் அ. இளையராஜா ஆத்மநாதன் தலைமையிலான போலீஸார், அடையாளம் காணப்பட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர். திமுகவை சேர்ந்த சிலர் வகித்து வரும் பரஸ்பர சகாய நிதி நிறுவனத்தில் பொறுப்பு கேட்டதாகக் கூறி தவெக மாநகர செயலாளர் முருகானந்தம் தாக்கப்பட்ட சம்பவம் கும்பகோணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0