கும்பகோணத்தில் புரட்சித் தலைவி அம்மா ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் 30-ஆம் ஆண்டு ஆயுதபூஜை விழா
கும்பகோணத்தில் புரட்சித் தலைவி அம்மா ஆட்டோ ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் 30-ஆம் ஆண்டு ஆயுதபூஜை விழா
கும்பகோணம், அக். 20 -
கும்பகோணம் மொட்டை கோபுரம் பகுதியில் உள்ள மொட்டை கோபுரம் புரட்சித் தலைவி அம்மா ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம் சார்பில், 30-ஆம் ஆண்டு ஆயுதபூஜை விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி, முன்னதாக அங்கு வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் இட்டு, மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடினர், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, திருவுருவப் படத்திற்கு பக்தியுடன் மாலை அணிவித்து தங்களது தொழில் வளம் பெருக வேண்டி தீபாராதனை செய்து ஆட்டோ ஓட்டுநர்கள் வழிபட்டனர்.
விழாவுக்கு, அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் க. கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர்கள் முத்துக்குமார், முன்னிலை வகித்தார் டி.ஆர். மனோகரன் சங்கத் தலைவர் நாதமணி, சங்க செயலாளர் முருகேசன், பொருளாளர் ராஜகோபால் செயற்குழு உறுப்பினர்கள் வி. பாலகிருஷ்ணன், ஜி. சரவணகிருஷ்ணன், எஸ். கோபாலன், ஏ. சுந்தரம், ஜி.கே. குமார், எஸ். சிவகடாட்சம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் நிறைவில் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கும், அருகிலிருந்த பேருந்து நிழற்குடையில் காத்திருந்த பயணிகளுக்கும் பொரிகடலை, சுண்டல் பிரசாதமாக வழங்கப்பட்டது.
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0