கும்பகோணம் மாநகராட்சி களப்பணியாளர்கள் 600 பேருக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு! அமைச்சர் ர. வினோத் வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

Nov 7, 2026 - 13:23
 0  19
கும்பகோணம் மாநகராட்சி களப்பணியாளர்கள் 600 பேருக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு!  அமைச்சர் ர. வினோத் வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்
கும்பகோணம் மாநகராட்சி களப்பணியாளர்கள் 600 பேருக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு!  அமைச்சர் ர. வினோத் வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்

கும்பகோணம் மாநகராட்சி களப்பணியாளர்கள் 600 பேருக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்பு!

அமைச்சர் ர. வினோத் வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார் 

கும்பகோணம், நவ. 7 -

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, கும்பகோணம் மாநகராட்சியில் பணிபுரியும் பாதாளச் சாக்கடைப் பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்புப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள் உள்ளிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என 600 களப்பணியாளர்களுக்கு வேட்டி, புடவை மற்றும் இனிப்புகள் அடங்கிய தீபாவளிப் பரிசுத் தொகுப்புகளை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர. வினோத் வழங்கினார்.

கும்பகோணம் சட்டப்பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், 600 களப்பணியாளர்களுக்கும் பரிசுத் தொகுப்புகளை வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தொடர்ந்து, களப்பணியாளர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர், அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார். அவற்றை உரிய முறையில் பரிசீலித்து, தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.கும்பகோணம் மாநகரின் தூய்மை, சுகாதாரம், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளில் இரவு, பகல் பாராமல் ஈடுபட்டு வரும் களப்பணியாளர்களுக்கு தீபாவளிப் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டது அவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai