உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

Oct 14, 2026 - 07:58
 0  4
உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' போட்டி: அண்ணாமலை அறிவிப்பு

மன்னார்குடி, அக். 14 -

தமிழகத்தில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு போட்டியிடும் என்று அதன் நிறுவனர் கே. அண்ணாமலை அறிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள தலையாமங்கலத்தில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் 15,000 மரக்கன்றுகள் நடும் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. டாக்டர் எம். ஆனந்த் எம்.பி.பி.எஸ். அவர்களின் ஏற்பாட்டில் 11 ஏக்கர் பரப்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு அமைப்பின் தலைவர் கே. அண்ணாமலை (ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி), தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டுப் பணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்,

 அப்போது அவர் கூறுகையில்

"ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கினால்தான் ஆரோக்கியமான அரசியலைப் பேச முடியும். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நேர்மையான, திறமையான புதிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்."

தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்த அவர், தாம் முன்பு பிரசாரம் செய்து வெற்றிபெறச் செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர், வெற்றிக்குப் பிறகு மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை ஓட்டு போட்ட மை கூட மறையவில்லை அதற்குள் வேட்டி மாறிவிட்டது, கட்சி மாறிவிட்டது, ஆட்சி மாறிவிட்டது, பேசிய வாயும் மாறிவிட்டது எனவும் நான் மக்களிடம் ஆதரவு கேட்ட வேட்பாளர்கள் கட்சியில் நீடிக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய சுயநல அரசியலை உடைத்தெறிய வேண்டும் என்றும், தமிழகத்தில் நடைபெறும் மோசமான அரசியல் முறைகளுக்குள் நாம் செல்லக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்களின் அடிப்படைப் பிரச்னைகள் எழாத வண்ணம் தடுக்கும் வகையில், எதிர்காலத் தலைவர்களாக உருவாகுபவர்கள் தத்தம் கிராமங்கள், நகரங்களில் உள்ள ஏரி, குளம் உள்ளிட்ட நீராதாரங்களைத் தூய்மைப்படுத்துவதிலும், மரங்களை நட்டுப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தின் அடிப்படையிலேயே 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு மக்களுக்கு உண்மையான மாற்றாகவும், இப்படியொரு அரசியல் இயக்கம் உருவாக வேண்டும் என்பதற்காகத்தான் நாம் காத்திருந்தோம் என்று, மக்கள் எண்ணும் வகையிலும் நமது அமைப்பு செயல்படும் என்றார் அவர். மேலும் பேசுகையில்

தொடர்ந்து, தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் களப்பணியாற்றும் தலைவர்களை உருவாக்கி, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாக அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.

நிகழ்ச்சியில் கருநாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி, கோவை வசந்தராஜன், திருவாரூர் கே. ரவி, கழுகு எஸ். சங்கர், செல்வி ஆர். லோகநாயகி, மல்லிகா மணிவண்ணன், பண்ணை வயல் இளங்கோ, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.என். செல்வம், ராஜ்குமார், வேட்டைத் திடல் ரமேஷ், பிரபு, வழக்குரைஞர்கள் ஐயப்பன், செந்தமிழ்ச்செல்வன், பூந்தோட்டம் இயற்கை வேளாண் ஆர்வலர் கார்த்தி, வலங்கை விமல், வாசன் நாகராஜன், வேதை வைரமுத்து, எட்டியலூர் சிவா உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

செய்தியாளர் அ. மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai