கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி தேர்தல் தகராறு: திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது வழக்கு

Oct 1, 2026 - 22:11
Oct 1, 2026 - 23:11
 0  11
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி தேர்தல் தகராறு: திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது வழக்கு
கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி தேர்தல் தகராறு: திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது வழக்கு

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி தேர்தல் தகராறு: திமுக எம்.பி. கல்யாணசுந்தரம் மீது வழக்கு

மேலாண் இயக்குனர் உட்பட 5 பேர் கைது; கும்பகோணம் கிளைச் சிறையில் அடைப்பு

கும்பகோணம், அக். 1 -

கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் தேர்தலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்ற தவெகவைச் சேர்ந்த ஸ்ரீதேவியிடம் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் மேலாண் இயக்குனர் உட்பட 5 பேரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வேலப்பன் (74), கருணாநிதி (57), கணேசன் (48), ஆகாஷ் (25), சைராஜன் (42) ஆகிய 5 பேரை கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கும்பகோணம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், அவதூறு வார்த்தைப் பிரயோகம் மற்றும் கைகலப்பாக மாறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இந்த வழக்குப் பதிவு மற்றும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

இதனால், பரஸ்பர சகாய நிதி நிறுவன இயக்குநர் தேர்தல் விவகாரத்தில் திமுக–தவெக தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல், காவல் நிலைய வழக்காக மாறி சிறைச்சாலை வரை சென்றடைந்த இந்தச் சம்பவம் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் அ.மகேஷ்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai