தஞ்சையில் புதிய ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு விழா

Jan 31, 2026 - 23:41
 0  97
தஞ்சையில் புதிய ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு விழா

புதிய ரோட்ராக்ட் சங்க பதவி ஏற்பு விழா
தஞ்சாவூர் மாவட்டம், பாவநாசம் தாலுக்காவில் அமைந்துள்ள ஏவிவிஎம் திரு புஷ்பம் கல்லூரியில் புதிய ரோட்ராக்ட் சங்கத்தின் பதவி ஏற்பு விழா (தொடக்க விழா) சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் மணிராஜ் அவர்கள் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார்கள்.
ரோட்ராக்ட் சங்கத்தின் ஆதரவுச் சங்கமாக (Sponsoring Club) செயல்படும் ரோட்டரி கிளப் ஆஃப் தஞ்சாவூர் மிட் டவுன் சார்பில் தலைவர் திரு. சுரேஷ் மற்றும் செயலாளர் திரு. வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரோட்டரி மாவட்ட ஆளுநர் திரு. செங்குட்டுவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
உதவி ஆளுநர், தஞ்சாவூர் மண்டலம், திரு. தமிழ்செல்வன், கல்லூரி துணை முதல்வர் திரு. மதன் மோகன், தேர்வு நெறியாளர் முனைவர் சந்திரன், கலைப் பிரிவு தலைவர் பேராசிரியர் திருமாவளவன், அறிவியல் பிரிவு தலைவர் முனைவர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சங்க நிர்வாகிகள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட சுமார் 350 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெகன் அவர்கள் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்கள்.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai