தனியார் பேருந்து கட்டணம் உயர்வு அதிர்ப்த்தியில் அரூர் சேலம் மக்கள் முதல்வர் விஜய்க்கு அவப்பெயர் கண்டுக்கொள்ளாத சேலம் போக்குவரத்து துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்தவுடன் ஊழல், லஞ்சம், குற்றம் இவை தடுக்கப்படவேண்டும் என முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர் பாணியில் சாட்டையை சுழற்றி ஆட்சி செய்து வருகிறார் இளைய தளபதி முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள். அப்படி இருக்கும் சூழலில் சாமானிய மக்கள் வேலைக்காக நகரப்பகுதிகளுக்கு சென்று வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் பேருந்துகளில் பெரும் ஊழல் நடப்பதை சேலம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கண்டுகொள்ளவில்லை என அரூர் டூ சேலம் செல்லும் பயணிகள் கொந்தளிப்பில் உள்ளனர். என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் தம்பிகளுக்கு, தங்கைகளுக்கும் நண்பா நம்பிகளுக்கும் சரியான நியாயமான ஆட்சியை கொடுப்பேன் என்றார் முதல்வர் விஜய். ஆனால் இன்று அரசுக்கு தெரியாமல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமே முடிவெடுத்து அரூர் டு அ.பள்ளிப்பட்டி வரை 15 ருபாய் இருந்த கட்டணம் 20 ரூபாய்க்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ஏன் இது இந்த அரசுக்கு தெரியாதா இல்லை போக்குவரத்துக்கு துறை அமைச்சருக்கு தெரியாதா முதல்வர் விஜய் ஆட்சிக்கு மக்களிடத்தில் வெறுப்பை உருவாக்கும் அளவிற்கு இது நடந்துள்ளது.
ஏன் அமைச்சர் அமைதியாக இருக்கிறார் என்ற கேள்வியை பேருந்தில் பயணம் செய்த பயணிகள் தெரிவிக்கின்றனர், இனிவரும் காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் பேருந்து கட்டணதத்தை குறைக்க வலியுறுத்துவாரா இல்ல தமிழக வெற்றி கழகம் மீது வெறுப்புணர்ச்சி ஏற்படுத்த வாய்ப்பு கோடுயப்பாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0