கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி வட்டார லயன்ஸ் சங்கங்கள் ஒருங்கிணைந்து பல்வேறு பயனாளிகளுக்கு சேவை திட்டங்களை வழங்கினர்
கும்பகோணத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி வட்டார லயன்ஸ் சங்கங்கள் ஒருங்கிணைந்து பல்வேறு பயனாளிகளுக்கு சேவை திட்டங்களை வழங்கினர்
கும்பகோணம், அக். 2 -
காந்தி ஜெயந்தியையொட்டி, கும்பகோணத்தில் வட்டார லயன்ஸ் சங்கங்கள் சார்பில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு ஆட்டுக்குட்டி, அரிசி மூட்டை, தையல் இயந்திரம், ஊன்றுகோல்கள், காது கேட்கும் கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைத் திட்ட உதவிகள் வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டன.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர். சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242 எஃப்-க்கு உள்பட்ட வட்டாரம் 15 டி.யின் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கம், குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கம், கும்பேஸ்வரர் லயன்ஸ் சங்கம் மற்றும் குடந்தை மகாசக்தி லியோ சங்கம் சார்பில் மாவட்ட ஆளுநரின் ஆண்டு அலுவல் வருகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட ஆளுநர் பிஎம்ஜேஎஃப் லயன். விஜயலட்சுமி சண்முகவேல் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
முன்னதாக, காலை 9 மணியளவில் கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகேயுள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அதன் பிறகு ஏ ஆர் ஆர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற சேவைத் திட்டத்தில், திருப்புறம்பியத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்கின்ற பெண்ணுக்கு இலவசமாக ஆட்டுக்குட்டியும், உமாமகேஸ்வரி என்ற பெண்ணுக்கு அரிசி மூட்டையும் வழங்கப்பட்டன. வயதான பயனாளிகள் 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஊன்றுகோல்கள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து
திருப்புவனத்தைச் சேர்ந்த கவிதா என்கின்ற பெண்ணுக்கு இலவச தையல் இயந்திரமும், காது குறைபாடு உள்ள பயனாளிகளுக்கு இலவச காது கேட்கும் கருவிகளும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், 8-ஆம் வகுப்பு மாணவருக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கத் தலைவர் கணேஷ், செயலர் எஸ்.வி. ராஜு, பொருளாளர் கே. சுந்தர்; குடந்தை மகாசக்தி லயன்ஸ் சங்கத் தலைவர் ஆர். ஹேமமாலினி, செயலர் கே.வி. கீதா, பொருளாளர் எம். உமாமகேஸ்வரி; கும்பேஸ்வரர் லயன்ஸ் சங்கத் தலைவர் ஆர். வேல்முருகன், செயலர் கே. செல்லதுரை, பொருளாளர் எஸ். மோகன்; குடந்தை மகாசக்தி லியோ சங்கத் தலைவர் எஸ். காவியா, செயலர் ஜி. ப்ரீதா, பொருளாளர் ஆர். தர்ஷனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வரவேற்புரையை ஹேமமாலினி ராமசாமி வழங்கினார். செயலர் அறிக்கையை எஸ்.வி. ராஜு, பொருளாளர் அறிக்கையை லயன்.உமாமகேஸ்வரி முருகேசன் வாசித்தனர். ஆளுநர் அறிமுகத்தை எம்.ஜே.எஃப். லயன் எஸ். ராஜ்குமார் வழங்கினார்.
லயன் டாக்டர் என். ராஜேந்திரன், லயன் பி. சௌந்தரபாண்டியன், லயன் என். நடராஜன், லயன் என். சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். லயன் கே. சுந்தர் நிகழ்ச்சியின் முடிவில் நன்றியுரை வழங்கினார்
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0