மைதருமபுரி_பசிக்குதா_வாங்க_சாப்பிடுங்க நாள்_2000 #மைதருமபுரி_8667229134 *2000 ஆவது நாளில் மை தருமபுரி பசிக்குதா வாங்க சாப்பிடுங்க அன்னதான சேவை திட்டம் கொண்டாடப்பட்டது
மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை தொடர்ந்து 14 ஆண்டுகளாக தருமபுரி மாவட்டத்தில் செய்து வருகின்றனர். ஏப்ரல் 14 2021 தமிழ் புத்தாண்டு அன்று முதல் தருமபுரி அரசு மருத்துவமனை அருகே மருத்துவ பயனாளர்களின் பார்வையாளர்களுக்கும் பசித்தோருக்கும் அன்னதானம் சேவை திட்டம் தொடங்கப்பட்டது. உலகம் முழுவதும் உள்ள பல நல்ல உள்ளங்களின் ஆதரவால் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வருகின்றனர். இன்றுடன் 2000 ஆவது நாளை சிறப்பிக்கும் வகையில் சாதம், சாம்பார், ரசம், பழங்கள், இனிப்புக்களுடன் அன்னதானம் சேவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக உதவும் உள்ளங்கள் மாணிக்கம் அய்யா, தருமபுரி ரோட்டரி மிட்டவுன் கிளப், மஹாலக்ஷ்மி சில்க்ஸ் வெங்கடேஷ் பாபு, பத்திர எழுத்தர் சிகே கணேஷ், ஆசிரியர் சௌந்திரபாண்டியன், பிஎஸ்பி சுரேஷ் குமார், தீபக்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனை சிந்து தீபக், ஜாஸ் கம்பியூட்டர் ஜெயவேல், பொறியாளர் கார்த்திக்கேயன், அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சண்முகம், கணேஷ், தன்னார்வலர்கள் காதர், விஜயகாந்த், சித்ரா ஆகியோர் அன்னதானம் சேவையை ஒருங்கிணைத்தனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0