சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் கைது
பழநி: பழநி மடம் நில மோசடி விவகாரத்தில் முன்ஜாமின் ரத்து செய்யப்பட்ட நிலையில், சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி கோவிலுடன் தொடர்புடைய, மடத்துக்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.40 ஏக்கர் நிலம், சமீபத்தில் தனியார் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதில், மோசடி நடந்ததாக புகார் எழுந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டு, அந்த பத்திரத்தை ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். சார் - பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சுப்பிரமணியன் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்தனர். அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில், இடைக்கால முன்ஜாமின் வழங்கப்பட்டது. பிறகு நேற்று முன்ஜாமின் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜஸ்டின் மணிகண்டன் ஐந்தாவதாக கைது செய்யப்பட்டு உள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0