குடந்தை மருதம் லயன்ஸ் சங்கம் சார்பில் 100 பயனாளிகளுக்கு அன்னதானம்
குடந்தை மருதம் லயன்ஸ் சங்கம் சார்பில் 100 பயனாளிகளுக்கு அன்னதானம்
கும்பகோணம், அக். 4 -
கும்பகோணத்தில் குடந்தை மருதம் லயன்ஸ் சங்கம் சார்பில் மாதாந்திர பசியாற்றுதல் சேவைத் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு அன்னதானமும், உலக மனநல நாளையொட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் முதியோருக்கு மனநலப் பயிற்சியும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
கும்பகோணம் நால் ரோடு சாலையில் உள்ள ஜே.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருந்தில்லா மருத்துவ சிகிச்சை நிபுணர் ஸ்ரீதேவி தலைமையில் மனநலப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் நாகரத்தினம் சிறப்புரையாற்றினார். சங்கத் தலைவர் வேணு ஜெயராமன், செயலாளர் என். சங்கர், சங்க உறுப்பினர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0