தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல் அப்பகுதியில் பெரும் பதற்றம்..! காவல்துறை விசாரணை
தஞ்சாவூரில் விவசாயிகள் சாலை மறியல்,
மேட்டூர் அணை ஜூன் 12 திறந்து ஜனவரி 28 மூடுவது வழக்கம். இந்நிலையில் கடந்த குறுவை கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடியால் நெல்மணிகள் முளைத்து தொடர் மழை பெய்து கொள்முதல் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக சம்பா,தாளடி நடவு பணிகள் தாமதம் ஆகிவிட்டது. மேலும் தித்வா புயல் மழை பெய்த போது ஒரு மாதம் கல்லணை கால்வாய் தண்ணீர் நிறுத்தப்பட்டது. நிலையில் கல்லணை கால்வாய் பாசனத்தில் உள்ள மானோஜிபட்டி,வல்லம் போன்ற ஐந்து கிராமங்களில் கல்லணை கால்வாயில் தண்ணீர் வராமல் கதிர் வரும் நிலையில் உள்ள நெல் பயிர்கள் காய்ந்து வருகிறது. எனவே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு 15 நாள் தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள்.*
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0