கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம் அருகே தேங்கிய கழிவுநீரால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கும்பகோணம் எம்எல்ஏ அலுவலகம் அருகே தேங்கிய கழிவுநீரால்
சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கும்பகோணம், செப். 29 -
கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே, தமிழக வெற்றிக் கழக சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது அதன் அருகே பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையில் கடந்த சில தினங்களாக பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து கழிவுநீர் நீண்ட தூரத்துக்கு தேங்கி, மழைநீர் போல் காட்சியளிக்கிறது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள், மற்றும் பொதுமக்கள் துர்நாற்றம் காரணமாக மூக்கை மூடிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றுவதுடன், அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து, கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பருவமழை காலத்தையொட்டி டெங்கு, மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது என சுகாதாரத்துறை ஆய்வின் மூலம் தெரியவந்த நிலையில் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0