உனக்கென்ன யோக்கித இருக்கு அன்புமணியை விளாசிய எம் பி மணி..!

Jan 30, 2026 - 12:06
Jan 30, 2026 - 12:17
 0  43
உனக்கென்ன யோக்கித இருக்கு அன்புமணியை விளாசிய எம் பி மணி..!

உனக்கென்ன யோக்கித இருக்கு அன்புமணியை விளாசிய எம் பி மணி..! 

தமிழகம் முழுவதும் கடந்த சனவரி 25 ஆம் தேதி  மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தருமபுரி திமுக கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு மலர் தூவி தனது மரியாதையை செலுத்தி பேசத்தொடங்கினார்.

தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் எம் பி ஆ மணி, அவர் பேசியதாவது யாருன்னு  அடையாளமே தெரியாத ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துட்டிங்க  என்று அன்புமணி விமர்சனம் செய்ததாக கூறி அன்புமணிக்கு என்னை பற்றி பேச என்ன யோக்கிதை இருக்கு பெத்த அப்பாவே என்னுடைய பேரை பயன்படுத்தக்கூடாதுன்னு அப்பா சொல்றாரு மானங்கெட்ட ஜென்மம் நீ , பெத்த அப்பனுக்கு துரோகம் செய்தவர் அன்புமணி.

வரும் தேர்தலில் உங்களை தேடி வருவார்கள் அவர்களுக்கு தக்க பாடம் புகட்டவேண்டும் என பேசியுள்ளார்.  தற்போது சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் தன்னுடைய சாதியை சார்ந்த ஒருவர் நான் வன்னிய இனத்தை சேர்ந்தவன் என சாதியை வெளிப்படையாக பேசியுள்ளார் ஒரு எம் பி திராவிட கட்சியில் இருப்பவர் இப்படி தன்னுடைய சாதியை சொல்லி மற்றும் முன்னாள் எம் பி அன்புமணி சாதியை குறிப்பிட்டு சொன்னால் வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படி வன்னிய சமூக மக்கள் வாக்களிப்பார்கள் என்று விமரசனம் எழுகிறது.

இது ஒரு புறம் இருக்க எம் பி பேசியதில் என்ன தவறு உள்ளது மற்ற சமூகத்தை பேசவில்லையே அவர் உரிமையில் பேசியுள்ளார், மேலும் இட ஒதுக்கீடுக்காக போராடிய மாபெரும் தலைவன் எங்கள் மருத்துவர் ராமதாசு அய்யா, அவருக்கு அன்புமணி துரோகம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மேலும் அவர் கூட்டணியாக இருக்கும் எந்த கட்சியும் வன்னியர் சமூக தெருவில வாக்கு கேட்க முடியாது என மருத்துவர் ராமதாசு ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்..!

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0
evidence_admin Evidenceparvai செய்தி சேனல் மக்களுக்கான விடுதலை பார்வை _ உங்கள் பகுதியில் நடக்கும் குற்ற சம்பவங்களையும் மோசடி சம்பவங்களையும் வைத்து செய்திகள் வெளியிட முடியாது. அதற்கு மீறிய ஒன்று உள்ளது குற்ற செயலும் மோசடி செயலும் நடக்கும் சம்பவத்திற்கு பின்னால் யார் இருப்பது இதற்கு யார் காரணம் என்று ஆய்வு செய்த பின்னரே ஆதாரத்துடன் செய்திகள் வெளியிட பாதை அமைக்கும் நமது நிறுவனம்தான் Evidenceparvai