26000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர்..தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின்..! தருமபுரிக்கு பழனியப்பன்..!
26000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கிய திமுக மேற்கு மாவட்ட செயலாளர்..தமிழ்நாட்டிற்கு ஸ்டாலின்..! தருமபுரிக்கு பழனியப்பன்..!
தமிழக முழுவதும் "
நலம் காக்கும் ஸ்டாலின்
" பெயரில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திலும் மக்களின் பேராதரவுடன் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் மருத்துவ சிகிச்சை பெற கலந்து கொண்ட பொதுமக்களுக்கு சுமார் 26000 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கி தமிழகம் திரும்பி பார்க்கும் அளவிற்கு "
நலம் காக்கும் ஸ்டாலின்
" மருத்துவ முகாமை வெற்றி பெறச்செய்துள்ளார் தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன். குறிப்பாக தருமபுரி திமுக மேற்கு மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்தில் 20 மருத்துவ முகாம்களை அமைத்து 70 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 150 மேற்பட்ட செவிலியர்கள், கொண்டு
நலம் காக்கும் ஸ்டாலின்
மருத்துவ முகாம் நடைபெற்றதில் பல்லாயிர கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் .
மேலும் பொதுமக்களுக்கு உணவு வழங்குவதில் எந்த ஒரு குறையின்றியும் தண்ணீர் பாட்டில், உணவு பெட்டகம், தேனீர், பிஸ்கட், சுண்டல், போன்றவைகளை வழங்கியதால் தருமபுரி திமுக மேற்கு மாவட்டத்தில் பொதுமக்களின் மத்தயில் பெரும் நம்பிக்கையை பெற்றுள்ளது திமுகவின் இந்த மருத்துவ முகாம்கள். தற்போது பழனியப்பன் உணவு வழங்கிய சம்பவம் தமிழகத்திற்கு ஸ்டாலின்..! தருமபுரிக்கு பழனியப்பன்..! என்ற நம்பிக்கையை பெற்றுள்ளார். 26000 பேருக்கு உணவு வழங்கிய சம்பவம் 2026 ஆம் ஆண்டிற்கான தேர்தல் வெற்றி குறியீடு எனவும் மக்களிடத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0