ரூ.17.77 கோடி ஊக்கத்தொகை நிலுவை: 23-ம் தேதி அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
ரூ.17.77 கோடி ஊக்கத்தொகை நிலுவை: 23-ம் தேதி அரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய *ரூ.17 கோடியே 77 லட்சம் ஊக்கத்தொகை* நிலுவையில் உள்ளதைக் கண்டித்து, வருகின்ற *23-ம் தேதி அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்* நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ள 3,800-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, டன் ஒன்றுக்கு ரூ.709.50 வீதம் மொத்தம் ரூ.17 கோடியே 77 லட்சம் ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, அரூர், தென்பெண்ணை ஆறு உபரி நீர் சேமிப்பு மற்றும் பயன்படுத்துவோர் அரூர் விவசாயிகள் நலச் சங்கம் சார்பில் அரூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் கரும்பு அனுப்பி உள்ளனர். அதற்கான ஊக்கத்தொகையை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தியும், தற்போது வரை அந்தப் பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.
எனவே, விவசாயிகளுக்கு உடனடியாக ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்குக் காவல் துறை அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை வழங்குவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டால், வருகின்ற 23-ம் தேதி அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த ஊக்கத்தொகை வழங்கப்படாததால், விவசாயிகள் தீபாவளிப் பண்டிகையைக் கூட முறையாகக் கொண்டாட முடியவில்லை. பள்ளி குழந்தைகளுக்குக் கட்ட வேண்டிய கல்விக் கட்டணத்தைக் கூட கட்ட முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
ஆகையால், தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த ஊக்கத்தொகையை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆலை நிர்வாகம் விளக்கம்
விவசாயிகளின் புகார் குறித்து சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் சி.டி.ஓ.,விடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளுக்குப் படிப்படியாக நிலுவைத் தொகை வழங்கி வருவதாகவும், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கான அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், ஒரு சில நாட்களில் அவர்களுக்கான ஊக்கத்தொகை வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
பேட்டி
ஜி. பி.வெங்கடேஷ்,
ஒருங்கிணைப்பாளர்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0