கும்பகோணத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க 14 மாதங்களாக தொடரும் அன்னதானப் பணி தினமும் காலை 11 மணிக்கு உணவு வழங்கும் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கம்
கும்பகோணத்தில் ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க 14 மாதங்களாக தொடரும் அன்னதானப் பணி
தினமும் காலை 11 மணிக்கு உணவு வழங்கும் குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கம்
கும்பகோணம், அக். 7 -
பசி போக்குவதை மனிதநேயத்தின் உயர்ந்த பணியாகக் கருதி, பெரிதினும் பெரிது கேள் என்ற வாசகத்திற்கு ஏற்றவாறு கும்பகோணத்தில், குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கம் சார்பில் கடந்த 21.7.2025 முதல் தொடர்ந்து 14 மாதங்களுக்கும் மேலாக ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது
சங்க ஆளுநர் பி.எம்.ஜே.எஃப். லயன் விஜயலட்சுமி சண்முகவேல் வழிகாட்டுதலின்படி, தினமும் காலை 11 மணியளவில் ஏ.ஆர்.ஆர். சாலை வழித்தடத்தில் புதுப்பாளையம் தெருவில் உள்ள மாவட்டத் தலைவர் எம்.ஜே.எஃப். லயன் ஆர். பூரண்குமார் இல்லத்தில் உணவு தயாரிக்கப்பட்டு, சரியாக காலை 11:00 மணி அளவில் ஏழை, எளியோர் உள்ளிட்ட உணவு தேவைப்படுவோருக்கு அன்றாடம் வழங்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் பசியாற்றும் மகத்தான பணியை நவராத்திரி விழா மாவட்டத் தலைவர் பூரண் குமார் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருகிறார்.
சேவைக்கு கிடைத்த பாராட்டு
இந்த மகத்தான மனிதநேய பணியை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தச் சேவையைப் பாராட்டும் வகையில், காந்தி ஜெயந்தியன்று ஏ.ஆர்.ஆர். சாலையில் குடந்தை மகாமகம் லயன்ஸ் மற்றும் வட்டார சங்கங்கள் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மாவட்ட ஆளுநர் ஆண்டு அலுவல் வருகை தினம் அன்று ஆளுநர் விஜயலட்சுமி சண்முகவேல் தலைமையில் வட்டார சங்கங்கள் முன்னிலையில் பூரண்குமாரின் மகத்தான சேவையை பாராட்டி ஆளுநர் திருக்கரங்களால் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கோவில் நகரமான கும்பகோணத்தில் நவராத்திரி விழாக்களிலும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் மட்டுமின்றி, நாள்தோறும் பசியால் தவிப்போருக்கு அன்றாடம் உணவு வழங்குவதை வழக்கமான தனது வாழ்நாள் சேவையாக வைத்திருக்கும் பூரண் குமாருக்கு குடந்தை மகாமகம் லயன்ஸ் சங்கத்தின் மனிதநேயப் பணிக்கு தனிச்சிறப்பை பெற்றுள்ளார்.
செய்தியாளர் அ.மகேஷ்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0