அண்ணன் திருமா அவர்கள் உடனடியாக த வெ க கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும். எவிடென்ஸ் பார்வை கோரிக்கை..! பஞ்சமி நிலத்தை ஒரு சில சமூகம் சுரண்டுகிறது என்றால் ஆதிதிராவிடர் சமூகமே உள்ளூரில் சாலையை திருடுகிறது..? ஏன் நடவடிக்கை இல்லை
@tvk, @vck,
அண்ணன் திருமா அவர்கள் உடனடியாக த வெ க கூட்டணியில் இருந்து வெளியே வரவேண்டும்
விசிக என்பது அரசியல் அதிகாரம் பெற வேண்டுமே தவிர அமைச்சர் அதிகாரமில்லை விசிக பதவிக்கு களம் இறங்குவதில்லை
பதவியில் உட்கார்ந்து கொண்டு ஊழல் செய்பவர்களை பல்லை புடுங்க களம் காணும் அரசியல் அதிகாரம் கொண்டது ஏதோ தவறு நடக்கிறது
வேண்டாம் அண்ணா வேண்டாம் கூட்டணியில் இருந்து வெளியேறுங்கள்
என்னதான் அமைச்சர் பதவி பெற்றாலும் இன்னும் சேரிகள் சேற்று குழியில் குடிநீரை தேடிக்கொண்டு, சேற்றிலே உருண்டு புரண்டு வாழ்க்கையை நடத்துவதும் இன்னும் மாறவில்லை நடைபாதையில் மின் விளக்கு இன்றி செல்போன் விளக்குகளையும், மின்மினி பூச்சி விளக்குகளையும் தேடுகிறது, பேருந்து வசதிகள் இல்லாமல் ஊர் பேர் தெரியாத ஆண்களின் வாகன இருக்கைக்காக கை அசைக்கும் நிலையை பார்த்தால் பெரும் போரில் நாவிற்கு நீரின்றி போர் புரிவது போல இருக்கும், இன்னும் இந்த கொடுமை மாறவில்லை..!
மாற்றம் நமது சமூதாயத்தில் இருந்து உருவாகவேண்டும் பஞ்சமி நிலத்தை சுரண்டிவிட்டார்கள் என்று போர்க்கொடி தூக்கிய விசிக தோழர்கள் இன்று எங்கே என்ற கேள்வி எழுகிறது
பஞ்சமி நிலத்தை ஒரு சில சமூகம் சுரண்டுகிறது என்றால்
ஆதிதிராவிடர் சமூகமே உள்ளூரில் சாலையை திருடுகிறது, ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த ஏழையின் நிலத்தை சுரண்டுகிறது.
ஆனால் எந்த விசிக பொறுப்பாளர்களும் இதனால் சாலை பாதிக்கப்படும் எதிர்கால குழந்தைகள் பாதிக்கப்படும் தன் சமூகத்தில் இருக்கும் நபர்கள் மீது நடவடிக்கை இது வரை போர்க்கொடி தூக்கியதில்லையே ஏன் என்ற கேள்வி எழுகிறது,
நமது சொந்த சமூகத்தில் நடக்கும் குற்றங்களை கேட்டால் அரசியலாக மாறாது மற்றவர்கள் செய்வதை கேட்டால் அரசியலாக மாறும் என்பதை ஒரு சில நபருக்குள் இருக்கும் எண்ணமே சில இடங்களில் விசிகாவை முழுமையாக உணரவைப்பதில்லை அண்ணா மாற்றம் நம்மிடமே உருவாக வேண்டும் அண்ணா
விசிக அமைச்சர் பதவி பெற்றிருந்தாலும் இன்னும் பாமர மக்களின் நிலை மோசமான நிலையை தொட்டுக்கொண்டிருக்கிறது இந்த 2026 ஆம் ஆண்டில் உங்களுக்கு புரியும் என நான் உணருகிறேன்
எம் எஸ் பி மணிபாரதி எவிடென்ஸ் பார்வை
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0